ஏலாதி பழைய உரை
பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆம் ஆண்டுக்கால இடைவெளியில் தோன்றியவை.[1]
ஏலாதி நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. உரை ஆசிரியர் பெயர் தெரியவில்லை.[2]
ஏலாதி நூல் பாடல் ஒவ்வொன்றிலும் ஆறு கருத்துகள் இருக்கும். இந்த ஆறு கருத்துகளையும் பிரித்துக் காட்டும் வகையில் இதன் உரை அமைந்துள்ளது.
இந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு. [3]
அடிக்குறிப்பு
தொகு- ↑ டாக்டர். மு. வரதராசனார், தமிழ் இலக்கிய வரலாறு.
- ↑ 1939 சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005