ஏழு மாநில இடைத்தேர்தல், 2024

இந்தியத் தேர்தல் ஆணையம் யூன் பத்தாம் தேதி பீகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, பஞ்சாப், உத்திராகண்டம், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் பதிமூன்று தொகுதிகளில் நடைபெறும் தேர்தல்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது.

பீகாரில் ரூபவுலி. மேற்கு வங்காளத்தில் ராய்கன்ஞ், ராணாகாட் தக்சிண், பகடா மற்றும் மணிக்டலா. தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி. மத்தியப் பிரதேசத்தில் அமர்வாரா. உத்திர காண்டத்தில் பத்ரிநாத், மன்கல்அவுர். பஞ்சாப்பில் மேற்கு சலந்தர். இமாசலப் பிரதேசத்தில் தேரா, காமிர்பூர், நலகார். போன்ற 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் இறந்துவிட்டதால் நடைபெறுகிறது.

அட்டவணை

தொகு
இடைத்தேர்தல் அட்டவணை[1]
தலைப்புகள் நாட்கள்
வேட்புமனு தாக்கல் யூன் 14
வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் யூன் 21
வேட்புமனு பரிசீலனை யூன் 24
வேட்புமனுவை திரும்பப்பெற இறுதி நாள் யூன் 26
வாக்குப்பதிவு யூலை 10
முடிவு அறிவிப்பு யூலை 13

தமிழ்நாடு

தொகு

விக்கிரவாண்டி தொகுதியின் திமுகவை சேர்ந்த புகழேந்தி ச.ம.உ கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி காலமாகிவிட்டார். இதையடுத்து அந்த தொகுதி ஏப்ரல் 8ஆம் தேதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. [2]

நாம் தமிழர் கட்சி சார்பில் 2024 தர்மபுரி மக்களவை தொகுதி வேட்பாளரான அபிநயா போட்டியிடுகின்றார். திமுக கூட்டணி சார்பாக திமுகவிலிருந்து அன்னியூர் சிவா போட்டியிடுகின்றார்.[3] பாசக கூட்டணி சார்பாக பாமகவிலிருந்து சி.அன்புமணி போட்டியிடுகின்றார். [4]அதிமுக கூட்டணி தேர்தலை புறக்கணிப்பதாக கூறிவிட்டது. [5] [6] விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 82.48 சதவீதம் வாக்குகள் பதிவானது. [7]

பாமக கொள்கையில் மாற்றம்

தொகு

இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி பணபலத்தையும், அதிகார பலத்தையும் வைத்து வெற்றி பெறுவதாக பாமக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் யாரேனும் உயிரிழந்தாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக பதவியை இழந்தாலோ, அதே கட்சியைச் சேர்ந்த ஒருவர் சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஒருவேளை, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க இடைத்தேர்தல் அவசியம் என்றால் மட்டுமே நடத்தலாம் என்பதும் பாமகவின் நிலைப்பாடாக உள்ளது. இதனால், இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என 13 ஆண்டுகளுக்கு முன்பு கொள்கை முடிவெடுத்த பாமக, அதன் பின்னர் இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதை தவிர்த்தது.

கடைசியாக, 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட தற்போதைய கவுரவ தலைவரான ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரன், அதிமுகவை விட 14 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, இரண்டாம் இடம் பிடித்தர். [8]

முடிவு

தொகு
விக்கிரவாண்டி முடிவு
கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு %
திமுக 124,053 63.22
பாமக 56,296 28.64
நாதக 10,602 5.4
நோட்டா 859 0.44

57 வாக்குச் சாவடிகளில் திமுகவை பின்னுக்குத் தள்ளி பாமக முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல் 45 வாக்குச் சாவடிகளில் பாமகவை பின்னுக்கு தள்ளிவிட்டு நாம் தமிழர் கட்சி இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது.[9]

மேற்கு வங்காளம்

தொகு
முடிவு
தொகுதி வென்ற கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு %
ராய்கஞ்ச் திரிணாமுல் காங்கிரசு 86479 57.97
ராணாகாட் திரிணாமுல் காங்கிரசு 113533 55.08
பகடா திரிணாமுல் காங்கிரசு 107706 55.04

உத்திரா கண்டம்

தொகு
முடிவு
தொகுதி வென்ற கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு %
பத்திரிநாத் காங்கிரசு 28161 51.93
மன்கலூர் காங்கிரசு 31727 37.91

இமாச்சலப் பிரதேசம்

தொகு

தேரா சட்டமன்ற தொகுதியில் காங்கிரசு கட்சியின் முதல்வர் சுக்விந்தர் சிங்கின் மனைவி கமலேசு தாக்கூர் போட்டியிடுகிறார். இதுவே இவரின் முதல் தேர்தலாகும்.[10]

முடிவு
தொகுதி வென்ற கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு %
தேரா காங்கிரசு 32737 57.94
காமிர்பூர் பாசக 27041 51.23
நலகார் காங்கிரசு 34608 46.43

பீகார்

தொகு
பீகார் முடிவு
தொகுதி வென்ற கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு %
ரூபவுலி கட்சி சாராதவர் 68070 39.97

மத்திய பிரதேசம்

தொகு
முடிவு
தொகுதி வென்ற கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு %
அமர்வாரா பாசக 83105 40.84

பஞ்சாப்

தொகு
பீகார்
தொகுதி வென்ற கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு %
சலந்தர் மேற்கு ஆம் ஆத்மி கட்சி 55246 58.39

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.thehindu.com/elections/bypolls-in-13-assembly-seats-in-seven-states-on-july-10/article68272938.ece
  2. விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! பாமக வேட்பாளரும் அறிவிச்சாச்சே! அதிமுக தாமதிப்பது ஏன்?
  3. விக்கிரவாண்டி: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
  4. விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிப்பு
  5. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பு
  6. விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக - என்ன காரணம்?
  7. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை
  8. 13 ஆண்டுகளுக்குப் பிறகு இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக... பின்னணி என்ன?
  9. விக்கிரவாண்டியின் 275 வாக்குச் சாவடிகளில் 57-ல் பாமக முதலிடம்; 45-ல் நாதக இரண்டாம் இடம்
  10. Latest News Today Live: Polling for by-elections concludes in 13 Assembly constituencies across seven states; Scuffle between BJP candidate and TMC workers in West Bengal