ஏ. எம். சரவணம்
ஏ. எம். சரவணம் ஒரு இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி[1]
[2][3]
ஏ. எம். சரவணம் | |
---|---|
பிறப்பு | தியாகி விருதுநகர் ஏ.எம்.சரவணகுமார் 1902 ஊட்டி தமிழ்நாடு |
இறப்பு | 1975 |
வாழ்க்கை
தொகுஇந்தியாவின் ஊட்டி,உதகமகண்டலம் நீலகிரி மாவட்டத்தில் எட்டாம் ஆம் வகுப்பு வரை படித்த இவர் 1902 ஆம் ஆண்டு பின்தங்கிய சமூகத்தில் பிறந்து வளர்ந்தார்,அவரது போராட்ட வரலாறு பெரியகாயத்தில் தீவிரமாக பங்கேற்று இந்தியாவில் காங்கிரஸ் யில் சேர்ந்தார், 1932 இல் தேசிய காங்கிரஸ் பெரியக்கம் பின்பு அவர் 1936 முதல் 1956 வரை காங்கிரஸ் கட்சியில் பணியாற்றினார்,மேலும் ஊட்டி டவுன் காங்கிரஸ்,நீலகிரி மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மற்றும் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து பணியாற்றினார்,1975 யில் மறைந்தார்.
அரசியல் கொள்கை
தொகுசுதந்திரத்திற்கு பின்னர் காமராஜ் அவர்கள் எம்எல்சி பதவியை ஏற்றுக்கொள்ள சொன்ன போது குடும்ப சூழ்நிலை காரணமாக அதனை ஏற்க மறுத்து விட்டார் . பின்னர் மிகவும் பிற்பட்டோர் நலக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு செயல்பட்டுவந்தார் . காங்கிரஸ் பேரியக்கம் இந்திராகாந்தி காலத்தில் இரண்டாக உடைந்த போது இவரை இந்திரா காங்கிரஸ் மாவட்ட தலைவராக அணுகியபோது அதை மறுத்து,காமராஜ் தலைமையிலான காங்கிரஸ் பேரியக்கத்திலேயே நிலைத்து வந்துள்ளார்.நீலகிரி மாவட்ட சலவைத் தொழிலாளர்கள் சங்கத்தை இவர் தலைமையேற்று திறம்பட செயல்பட்டவர் .இந்திராகாந்தியால் கொண்டு வரப்பட்ட எமர்ஜென்சியை கண்டு வெகுண்டெழுந்தவர் காமராஜரின் மறைவுக்கு பின்னர் அதிர்ச்சிக் குள்ளாகி பிறகு 1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் நாள் காலமானார் .இவரது சுதந்திரபோராட்ட பங்கினை கவுரவிப்பதற்காக பிரதமர் இந்திராகாந்தி அரசு தாமிர பட்டயமும்,பாராட்டு பத்திரமும் வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.