ஏ.ஜி நூரனி ( Abdul Gafoor Abdul Majeed Noorani 16 செப்டம்பர் 1930) என்பவர் இந்திய வழக்கறிஞர், வரலாற்றாளர், மற்றும் நூலாசிரியர் ஆவார். இந்திய உச்ச நீதி மன்றத்திலும் மும்பை உயர் நீதி மன்றத்திலும் வழக்குரைஞராக வழக்காடியவர்.[1] இந்திய அரசியல் சட்டத்தில் பரந்து பட்ட அறிவு கொண்டவர் என மதிக்கப்படுபவர்.

எழுத்தாளர் மற்றும் நூலாசிரியர் தொகு

மும்பையில் பிறந்த இவர் அரசுப் பள்ளியில் பயின்று பின்னர் மும்பை அரசு சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியில் தேர்ந்தார். இந்துஸ்தான் டைம்ஸ், தி இந்து, டாண், தி ஸ்டேட்ஸ்மன், பிரண்ட்லைன், எக்கனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்கிலி போன்ற நாளிதழ்களிலும் வார, மாத இதழ்களிலும் எழுதி வருபவர். அரசியல், சமூகம் மற்றும் சட்டச் சிக்கல்கள் தொடர்பான கட்டுரைகளை இவற்றில் எழுதுகிறார். காசுமீர சிக்கல், ஜனாதிபதி ஆட்சி முறை, பகத்சிங் விசாரணை, இராட்டிரிய சுயம் சேவக் சங்கம் , பாரதிய சனதா கட்சி ஆசியப் பாதுகாப்புக்கு பிரஸ்னவ் திட்டம், பத்ருதீன் தியாப்ஜி, சாகிர் உசேன் ஆகியோரின் வரலாறுகள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஜின்னாவும் திலகரும் போன்ற நூல்களை எழுதி வெளியிட்டார்.

படைப்புகள் தொகு

  • The Destruction of Hyderabad (2014),[2] ISBN 9781849044394
  • The Kashmir Dispute 1947-2012, 2 Volume set (editor, 2013),[3] ISBN 9789382381198, ISBN 9789382381204
  • Islam, South Asia and the Cold War (2012)
  • Article 370: A Constitutional History of Jammu and Kashmir (2011)
  • Jinnah and Tilak: Comrades in the Freedom Struggle (2010)
  • India–China Boundary Problem 1846–1947: History and Diplomacy (2010), ISBN 9780198070689
  • The RSS and the BJP:A Division of Labour(2008), ISBN 9788187496137
  • Indian Political Trials 1775–1947 (2006), ISBN 9780195687767
  • Constitutional Questions and Citizens’ Rights (2006)
  • The Trial of Bhagat Singh: Politics of Justice (2005), ISBN 9780195678178
  • The Muslims of India: A Documentary Record (editor, 2003)
  • Islam and Jihad: Prejudice versus Reality (2002)[4] ISBN 9781842772713
  • The Babri Masjid Question 1528–2003: ‘A Matter of National Honour’, in two volumes (2003).
  • Constitutional Questions in India: The President, Parliament and the States (2002), ISBN 9780195658774
  • Savarkar and Hindutva (2002),[5] ISBN 9788187496830

மேற்கோள் தொகு

  1. "Author Profile". Oxford University Press. Archived from the original on 13 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 10 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "The Destruction of Hyderabad". Archived from the original on 2014-09-17. பார்க்கப்பட்ட நாள் 2014-09-17.
  3. "The Kashmir Dispute 1947-2012, Vol. 1". Archived from the original on 2014-09-17. பார்க்கப்பட்ட நாள் 2014-09-17.
  4. "Islam and Jihad". Archived from the original on 2014-09-17. பார்க்கப்பட்ட நாள் 2014-09-17.
  5. "Savarkar and Hindutva". Archived from the original on 2014-09-17. பார்க்கப்பட்ட நாள் 2014-09-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஜி._நூரனி&oldid=3546534" இலிருந்து மீள்விக்கப்பட்டது