ஏ. பி. ஜகத் புஸ்பகுமார
ஏ. பி. ஜகத் புஸ்பகுமார (A. P. Jagath Pushpakumara, பிறப்பு: ஏப்ரல் 3 1963), இலங்கை அரசியல்வாதி. இவர் தெங்கு மற்றும் தோட்ட அபிவிருத்தி அமைச்சருமாவார். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மொனராகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 10 வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
தெங்கு மற்றும் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஏ. பி. ஜகத் புஸ்பகுமார | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் மொனராகலை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 3, 1963 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
பணி | அரசியல்வாதி |
சமயம் | பௌத்தம் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகு110/4, விஜயராம லேன், கொழும்பு 07 இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.