ஏ. மாரியப்பன் முதலியார்
ஏ. மாரியப்பன் முதலியார் (A. Mariappan Mudaliar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். மக்களுக்கு தொண்டு செய்யும் வள்ளல் குணம் கொண்ட இவர் 1957 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சேலம் - I தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்தில் மாரியப்பன் பிறந்தார்.[2]
1952 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை மாரியப்பன் முதலியார் அம்மாபேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தார். இந்த கூட்டுறவு சங்கம் தமிழ்நாட்டின் மிகப் பழமையானதும் மிகப்பெரியதுமாகும். இச்சங்கம் ஆயிரக்கணக்கான நெசவாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தியது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Madras, 1957". Election Commission of India. Archived from the original on 20 செப்டெம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 2 மே 2020.
- ↑ "Salem A. Mariappan Mudaliar Birthday/ ஏ. மாரியப்பன் முதலியார். exMLA ஐயாவின் பிறந்த தினம்". Sengundhar Kaikola Mudhaliyar website (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
- ↑ Mines, Mattison (1984). The Warrior Merchants: Textiles, Trade and Territory in South India. Cambridge University Press. pp. 134–137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521267144.