ஐக்கிய மக்கள் கட்சி

வங்காளதேச அரசியல் கட்சி

ஐக்கிய மக்கள் கட்சி (United Peoples' Party) வங்காளதேசத்தில் 1974 ஆம் ஆண்டு காசி சாபர் அகமதுவால் நிறுவப்பட்டது. பொது வாக்கெடுப்பு மூலம் சனாதிபதியாக பதவியேற்ற சியாவுர் ரகுமானுடன் ஐக்கிய மக்கள் கட்சியை ஒரு கூட்டணி அரசாங்கத்திற்கு காசி சாபர் கொண்டு சென்றார்.[1] காசி சாபர் அகமது கல்வி அமைச்சரானார் என்றாலும் சமரசம் செய்ய முடியாத கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியை விட்டு வெளியேறினார். இருப்பினும், இவரது முன்னாள் நண்பர்கள் பலர் சியாவின் புதிய கட்சியான வங்காளதேச தேசியவாத கட்சியில் இணைந்தனர். சனாதிபதி உசைன் முகம்மது எர்சாத்தின் இராணுவ எதிர்ப்புப் பாத்திரத்திலும் அகமது முக்கிய பங்கு வகித்தார். வங்காளதேசத்தில் 1975 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. தலைவர்கள் தங்கள் பழைய கட்சிகளை விட்டு வெளியேறி புதிய கட்சிகளில் இணைந்தனர். அகமது தனது ஐக்கிய மக்கள் கட்சியைக் கலைத்துவிட்டு சனாதிபதி எர்சாத்தின் சாட்டியா கட்சியில் சேர்ந்தார்[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Profile - Mr. Kazi Zafar Ahmed". Tritiyomatra.com. பார்க்கப்பட்ட நாள் 2017-04-21.
  2. "New Age – Kazi Zafar Ahmed: a personal tribute". Archive.newagebd.net. 2015-10-08. Archived from the original on 2017-04-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐக்கிய_மக்கள்_கட்சி&oldid=3662172" இலிருந்து மீள்விக்கப்பட்டது