ஐங்குறுநூறு - பாலை

ஐங்குறுநூறு என்னும் நூல் பாட்டும் தொகையுமாகிய சங்கப் பாடல்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் வரிசையில் ஐந்திணைப் பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திணையிலும் 100 பாடல்கள் உள்ளன. அவை சிறுசிறு ஆசிரியப் பாக்களின் அடுக்குகளாக உள்ளன. ஒவ்வொரு திணையிலும் 10 பாக்களைக் கொண்ட 10 அடுக்குகள் உள்ளன. ஒவ்வொரு திணையிலுமுள்ள 100 பாடல்களையும் ஒரே புலவர் பாடியுள்ளார். இந்த நூலின் பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவர் ஓதலாந்தையார்.

இதில் உள்ள 10 பத்துகள்

1 செலவு அழுங்குவித்த பத்து

தொகு

தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்வதைத் தவிர்க வேண்டும் 10 பாடல்கள் இதில் உள்ளன. பாலை நிலத்தின் கொடுமை இதில் கூறப்பட்டுள்ளது. பொருளின் பெருமையைத் தலைவி உணர்வாள். பொருள் தேடச்செல்லும் வழியின் கொடுமையை எண்ணியே செல்லவேண்டாம் என்கிறாள். தோழி சொல்வதாகப் பாடல்கள் உள்ளன.

  • பாடல் எண் வரிசையில் செய்திகள்
  1. பாலையில் இருக்கும் ஓத்திரம் என்னும் பூவைத்தான் தலைவன் சூடிக்கொள்ள வேண்டி வரும்.
  2. பொருள் கைவரப் பெறாமையும் நேரலாம். தலைவன் பிரிவால் தலைவி தகையவும் (உயிர் பிரியவும்) கூடும்.
  3. வழியில் ஆலம்பழம் கிடைக்கும். என்னையும் கைஊட்டிச் செல்.
  4. வழியில் கோவலர் தம் கோலால் தோண்டி வைத்துள்ள ஆன் நீர்ப் பத்தல் (ஊற்றுநீர்க் குழியை) யானை உண்டபின் மிதித்து அழிக்கப்பட்டிருக்கும்
  5. களிறு கூடத் தன் பிடியை அழைத்துச் செல்லாமல் பசியோடு கிடக்கும் காட்டில் உனக்கு என்ன கிடைக்கும்.
  6. நீ பிரியின் இவள் யாழ் ஒலி போல் அழுவாள்.
  7. மூங்கில் காடு தீப்பற்றி எரிவதைக் கண்டு யானையே அநபக் காட்டை வெறுக்கும். அந்தக் காட்டில் செல்கிறாயே.
  8. நீ பிரிந்தால் மலையிலிருந்து முருகன் பிரிந்துவிட்டான் என்று இவள் உயிரும் பிரிந்துவிடும்.
  9. பிறக்கப்போகும் உன் மகனின் புன்சிறிப்பைக் காண்பதை விட நீ கொண்டுவரும் பொருள் இனிதா?
  10. நீ பிரியின் இவள் தோள்வளை நெகிழும். இவள் நுதல் (ஆகுபெயராய் முகத்தைக் குறிக்கும்) பொலிவு இழக்கும்.

2 செலவுப் பத்து

தொகு

3 இடைச்சுரப் பத்து

தொகு

==4 த லைவி இரங்கு பத்து==

5 இளவேனிற் பத்து

தொகு

6 வரவு உரைத்த பத்து

தொகு

7 முன்னிலைப் பத்து

தொகு

8 மகட் போக்கியவழித் தாய் இரங்கு பத்து

தொகு

9 உடன்போக்கின்கண் இடைச்சுரத்து உரைத்த பத்து

தொகு

10 மறுதரவுப் பத்து

தொகு

தலைமகனுடன் உடன்போய தலைமகள் மீண்டு வரற்பொருட்டு தாய் ஏக்கத்தோடு பாடிய செய்யுளும், உடன்போய் மீளும் தலைமகனும் தலைமகளும் ஊர்க்கு வரும்போதும் வீடு புக்கப்போதும் தாயும் செவிலியும் தோழியும் தலைமகனும் பாடிய செய்யுட்களும் இப்பத்தில் உள்ளன.

எடுதுக்காட்டாய் இப்பத்தின் முதற் செய்யுளைக் காண்போம்.

மறு இல் தூவிச் சிறுகருங் காக்கை!

அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப்

பச்சூன் பெய்த பைந் நிண வல்சி

பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ

வெஞ்சின விறல் வேல் காளையொடு

அம்சில் ஓதியை வரக் கரைந்தீமே.

உடன்போய தலைமகள் மீண்டு வர வேண்டுமாய் தாய் ஏங்குகிறாள். அதனால் வீட்டின் கண் கண்ட காக்கையிடம் தலைமகள் மீண்டு வரும்பொருட்டு கரையுமாறு வேண்டுகிறாள்.

பொருள் : குற்றமில்லாத கலையாத அழகிய சிறிய சிறகுகளை உடைய கருமையான காகமே! அன்பைப் பேணும் மரபை உடைய இனத்தைச் சேர்ந்த நீ கிடைத்த உணவு சிறிதாயினும் நின் சுற்றத்தோடு கூடி உண்பாய். அத்தகைய நினக்கு, புதுமையாக அறுக்கப்பட்டு நிண நீர்ச் சொட்டும் பச்சை இறைச்சியான உணவை பொன்னால் செய்யப்பட்ட கலத்தில் வைத்து உனகுத் தருவேன். அதை மகிழ்ச்சியோடு உண்டு, சுடுகின்றாற் போன்ற கடும் சினத்தையும் நல்ல வலிமையையும் கையில் கொலை செய்யும் வேலையும் கொண்ட காளை போன்ற ஆண்மையும் வலிமையும் வீரமும் நிறைந்த ஆண்மகனோடு உடன்போய அழகான சிறிய கூன்தலை உடைய என் மகள் மீண்டு வருமாறு சற்று கரையாயே??

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐங்குறுநூறு_-_பாலை&oldid=3722491" இலிருந்து மீள்விக்கப்பட்டது