ஐங்குறுநூறு - முல்லை

ஐங்குறுநூறு என்னும் நூல் பாட்டும் தொகையுமாகிய சங்கப் பாடல்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் வரிசையில் ஐந்திணைப் பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திணையிலும் 100 பாடல்கள் உள்ளன. அவை சிறுசிறு ஆசிரியப் பாக்களின் அடுக்குகளாக உள்ளன. ஒவ்வொரு திணையிலும் 10 பாக்களைக் கொண்ட 10 அடுக்குகள் உள்ளன. ஒவ்வொரு திணையிலுமுள்ள 100 பாடல்களையும் ஒரே புலவர் பாடியுள்ளார். இந்த நூலின் முல்லைத்திணைப் பாடல்களைப் பாடியவர் பேயனார்.

இதில் உள்ள 10 பத்துகள்

எடுத்துகாட்டுப் பாடல்

தொகு
  1. செவிலி கூற்றுப் பத்து
  2. கிழவன் பருவம் பாராட்டுப் பத்து
  3. விரவுப் பத்து
  4. புறவணிப் பத்து
  5. பாசறைப் பத்து
  6. பருவம் கண்டு கிழத்தி உரைத்த பத்து
  7. தோழி வற்புறுத்த பத்து
  8. பாணன் பத்து
  9. தேர் வியங்கொண்ட பத்து
  10. வரவுச்சிறப்பு உரைத்த பத்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐங்குறுநூறு_-_முல்லை&oldid=4163847" இலிருந்து மீள்விக்கப்பட்டது