ஐசுவர்யா பிசே

ஐசுவர்யா பிசே (Aishwarya Pissay) இந்தியாவைச் சேர்ந்த மோட்டார் வாகனப் பந்தய வீர்ராவார். 1995 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 14 அன்று ஐசுவர்யா பிசே பிறந்தார். சுற்றுவழி மோட்டார் வாகனப் பந்தய வகை, கரடு முரடான செப்பனிடப்படாத சாலை மோட்டார் வாகனப் பந்தய வகைகளில் பிசே பங்கேற்று விளையாடுகிறார்.

ஐசுவர்யா பிசே
Aishwarya Pissay
Aishwarya Pissay.jpg
தனிநபர் தகவல்
பிறப்பு14 ஆகத்து 1995 (1995-08-14) (அகவை 25)
பெங்களூர், கர்நாடகா, இந்தியா
வசிப்பிடம்பெங்களூர்
விளையாட்டு
நாடுஇந்தியா
நிகழ்வு(கள்)சுற்றுவழி மோட்டார் வாகனப் பந்தயம்/செப்பனிடப்படாத சாலை பந்தயம்/மோட்டார் கார் பந்தயம்]]

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் உலக பட்டத்தை வென்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் என்ற பெருமை பிசேவுக்கு உண்டு. எப். ஐ. எம். பயாசு எனப்படும் பன்னாட்டு மோட்டார் பந்தய கூட்டமைப்பு நடத்திய உலகக் கோப்பை போட்டியில் டி.வி.எசு. நிறுவனத்தின் ஆதரவுடன் பங்கேற்ற பிசா, பெண்கள் பிரிவில் முதலிடத்தையும் இளையோர் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றார். இப்போட்டியில் வெற்றி பெற 800-1000 கிலோமீட்டர் தூரம் வரை மாறுபட்ட நிலப்பரப்புகளில் இரண்டு நாட்கள் பயணிக்க வேண்டும்.

சுற்றுவழி மோட்டார் சைக்கிள் மற்றும் பொது சாலைவழி மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் சாம்பியன் பட்டம் பெற்ற முதலாவது இந்தியப் பெண் என்ற சிறப்பும் பிசேவைச் சேர்ந்ததாகும். தனது 18 ஆவது வயதில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் தனக்கிருந்த ஆர்வத்தைப் கண்டு கொண்ட பிசே தனது சொந்த ஊரான பெங்களூரைச் சுற்றி சிறிய சாலைப் பயணங்களை மேற்கொண்டார். இதன் விளைவாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் சவாரி செய்யும் கலை நுட்பங்களைக் கற்று பந்தயங்களில் எவ்வாறு வெற்றிபெறலாம் என்பதைக் கற்றுக்கொண்டார். 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தேசிய பொதுசாலை வகை போட்டியிலும், தேசிய பொதுசாலை வகை சாம்பியன் பட்டப் போட்டியிலும் பங்கேற்று நான்கு தேசிய பட்டங்களை வென்றார். 2018 ஆம் ஆண்டில் தேசிய பொதுசாலை வகை சாம்பியன் பட்டப் போட்டியில் போட்டியிட்டு தேசிய பட்டம் வென்றார். [1] இதன் மூலம் பொழுது போக்கு மோட்டார் வாகன வீராங்கனையாக இருந்த பிசே தொழில் முறை வீர்ராக உருவெடுத்தார். 2018 ஆம் ஆண்டில் எசுப்பானியாவில் நடைபெற்ற பாயா அரகோன் உலக பொதுசாலை வகை சாம்பியன் பட்டப் போட்டியில் போட்டியிட்ட முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையையும் பிசா பெற்றார். [2]

பின்னணிதொகு

பள்ளிப் பருவத்திலிருந்தே பிசேவுக்கு மோட்டார் சைக்கிள் பந்தய வீர்ராகவேண்டும் என்ற கனவு இருந்தது. குடும்பம் சற்று பழமைவாதமானது என்பதால் பெண்கள் மோட்டார் சைக்கிள் போட்டிகளில் பங்கேற்பதை பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. மற்ற பெண்களைப் போல பிசேவும் நன்றாகப் படித்து பணிக்குச் செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.

அந்நேரத்தில் நாட்டில் குறைந்த அளவிலேயே பெண்கள் மோட்டார் வாகனப் பந்தயங்களில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். பல எதிர்ப்புகளைத்தாண்டி தாயாரின் ஆதரவுடன் பிசே தன் கனவை நோக்கிய பயணத்தை தொடர்ந்தார்.

18 வயதில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். வார இறுதியில் நண்பர்களோடு இருசக்கர வாகனத்தில் பயணங்கள் மேற்கொண்டார். பிசேவுக்கு எம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது, அது 24 நாட்களில் குசராத்திலிருந்து மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சிக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டமாகும். இதற்காக 8000 கிலோ மீட்டர் தூரத்தை, இருசக்கர வாகனத்தில் கடந்தார். 2017ஆம் ஆண்டு டி.வி.எசு. மோட்டார் நிறுவனத்துடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. இதன் பின்னர் பிசேவுக்கு தன்னம்பிக்கையும் குடும்பத்தின் பொருளாதார வளத்தை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளும் அமையத் தொடங்கின.

தொழில் முறை சாதனைகள்தொகு

2016தொகு

பெங்களூரில் உள்ள அபெக்சு மோட்டார் பந்தய அகாடமியில் பயிற்சி பெற்ற பிசே 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி.வி.எசு. ஒன் மேக் சாம்பியன் பட்டப் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றார்.

2017தொகு

சியாட் நிறுவனம் நடத்திய சிப்ரிண்ட் மோட்டார் கார் போட்டியை வென்ற ஐசுவர்யா 2016 ஆம் ஆண்டு அபெக்சு மோட்டார் பந்தய அகாடமியிலும் 2017 ஆம் ஆண்டு கலிபோர்னியா சிறப்பு மோட்டார் சைக்கிள் பள்ளியிலும் பயிற்சி முடித்து பட்டம் பெற்றார். ஒரே ஆண்டில் இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன் பட்டத்தையும், இந்திய தேசிய மோட்டார் கார் பந்தயத்தையும் வென்றார். [3][4] தக்சின் டேர் பிரிவு பி வகை மோட்டார் கார் பந்தயத்தில் மூன்றாவது இடமும் ரெய்டு டி இமாலாயா போட்டியில் நான்காவது இடத்தையும் பிசே வென்றார். ரெய்டு டி இமாலாயா போட்டியில் தொழில்முறை போட்டியாளர்கள் பங்கு பெறும் எக்சிட்ரீம் பிரிவு போட்டியில் போட்டித் தொலைவை முழுமையாக நிறைவு செய்த ஒரே பெண் என்ற சிறப்பைப் பெற்றார். [5] டி.வி.எசு. நிறுவனம் நடத்திய ஒன் மேக் சாலைவழி மோட்டார் சைக்கிள் சாம்பியன் பட்டத்தையும் இதே ஆண்டில் வென்றார். [6] டி.வி.எசு. நிறுவனம் பிசேவை தனது நிறுவன மோட்டார் வாகன வீர்ராக ஒப்பந்தம் செய்து கொண்டது.

2018தொகு

2018 ஆம் ஆண்டில் ஐசுவர்யா இந்திய தேசிய மோட்டார் கார் சாம்பியன் பட்டத்தை வென்றார். [1][7] எசுப்பானியாவில் நடைபெற்ற பாயா அரகோன் போட்டியில் கலந்துகொண்டு விபத்திற்குள்ளாகி போட்டியிலிருந்து விலகினார். [8]

விருதுகள்தொகு

2016 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவைச் சேர்ந்த டி.ஐ.இ நிறுவனத்தின் இளம் சாதனையாளர் விருது ஐசுவர்யாவுக்கு வழங்கப்பட்டது. [9] இதே ஆண்டில் இந்திய மோட்டார் வாகனப் பந்தய சங்கங்களின் கூட்டமைப்பு வழங்கும் சிறந்த மோட்டார் வாகன பந்தயப் பெண் என்ற விருதும் வழங்கப்பட்டது. [10] 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த மோட்டார் வாகன பந்தயப் பெண் விருதும் ஐசுவர்யாவுக்கே கிடைத்தது. ஆட்டோடிரக் என்ற மோட்டார் வாகனப் பத்திரிகை 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் விளையாட்டு வீர்ர் என்ற விருதை வழங்கி சிறப்பித்தது. [11]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசுவர்யா_பிசே&oldid=3108463" இருந்து மீள்விக்கப்பட்டது