ஐதரசன் பாலியாக்சைடு
ஐதரசன் பாலியாக்சைடுகள் (Hydrogen polyoxides) என்பவை ஐதரசன், ஆக்சிசன் அணுக்களை மட்டுமே கொண்டு உருவாகும் வேதிச்சேர்மங்களாகும். ஆக்சிடேன்கள், ஆக்சோ ஐதரசன்கள், ஆக்சி ஐதரசன்கள் என்ற பெயர்களாலும் இவை அழைக்கப்படுகின்றன. குறிப்பாக இவற்றிலுள்ள அணுக்கள் ஒற்றைப் பிணைப்புகளால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. நிறைவுற்றவை என வகைப்படுத்தப்படும் இவற்றின் கட்டமைப்பில் வளையங்கள், சுற்றுகள் போன்ற வடிவங்கள் ஏதுமிருப்பதில்லை. எனவே இவற்றை ஐதரசன் சால்கோகெனைட்டுகள் என்று வகைப்படுத்தலாம்.
தண்ணீர் ஓர் எளிய ஐதரசன் பாலியாக்சைடு ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு H2O ஆகும். சில ஆக்சிசன் அணுக்கள் ஒரு சங்கிலியில் ஒன்றுடன் ஒன்று ஒற்றைப் பிணைப்பால் பிணைக்கப்பட்டிருப்பது இவ்வகை மூலக்கூறுகளின் பொது கட்டமைப்பாகும். இத்தகைய ஆக்சிசன் கூட்டின் இரண்டு முனையும் ஐதரசன் அணுக்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு இத்தகைய சேர்மங்கள் யாவும் H2On என்ற பொதுவாய்ப்பாட்டுடன் ஒத்தவரிசைச் சேர்மங்களை உருவாக்குகின்றன. இவ்வரிசைச் சேர்மங்களுக்கிடையே உள்ள பொது வித்தியாசம் கூடுதலாகச் சேர்கின்ற ஆக்சிசன் அணுவின் மூலக்கூற்று நிறையான 16 ஆக இருக்கும். ஐதரசன் பாலியக்சைடின் உருவ அளவை விளக்குவதற்கு அம்மூலக்கூறில் உள்ள ஆக்சிசன் அணுக்களின் எண்ணிக்கை பயன்படுகிறது. உதாரணமாக ஐதரசன் [பென் டாக்சைடைக் கூறலாம். இதில் ஐந்து ஆக்சிசன் அணுக்கள் இருக்கின்றன.
ஒர் ஆக்சிடேனைல் தொகுதி என்பது ஒரு வேதி வினைக்குழுவாகும். இதை பக்கச்சங்கிலி என்றும் அழைப்பர். இதிலும் ஐதரசன் பாலியாக்சைடைப் போலவே முழுவதுமாக ஐதரசன் மற்றும் ஆக்சிசன் அணுக்கள் ஒற்றைப் பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளன. ஆக்சிடைல் எனப்படும் ஐதராக்சி அல்லது ஐதரோபெராக்சி எனப்படும் டைஆக்சிடைனைல் தொகுதி போன்றவை உதாரணங்களாகும்.
குறிப்பிடத்தகுந்த உதாரணங்கள்
தொகுஅதிகபட்சம் 5 ஆக்சிசன் அணுக்களைக் கொண்ட ஐதரசன் பாலியாக்சைடுகள் சோதனை முறையில் உற்பத்தி செய்யப்பட்டன.
- தண்ணீர் (H2O) பொதுவான ஐதரசன் பாலியாக்சைடு ஆகும். புவிப்பரப்பில் இது பரவலாகக் காணப்படுகிறது.
- ஐதரசன் பெராக்சைடு (H2O2) பொதுவான ஒரு தொற்று நீக்கியாகும். இது எளிதாக சிதைவடைந்து தண்ணீர், ஆக்சிசன் என மாறுகிறது.
- டிரையாக்சிடேன் (H2O3) அரிதாகக் கிடைக்கும் தண்ணீர் மற்றும் ஒற்றை ஆக்சிசனாக சிதைவடையும்
- ஐதரசன் டெட்ராக்சைடு (H2O4) தாழ் வெப்பநிலையில் பெராக்சி இயங்குறுப்புகள் வினைபுரிந்து இதை உருவாக்குகின்றன[1].
- ஐதரசன் பென்டாக்சைடு (H2O5) is a byproduct of டிரையாக்சிடேன் தயாரிப்பின் போது உடன் விளைபொருளாக இது உருவாகிறதுref>Xin Xu and William A. Goddard III. Peroxonechemistry: Formation of H2O3 and ring-(HO2)(HO3) from O3/H2O2</ref>. இதையும் பெராக்சி இயங்குறுப்புகளை வினைபுரியச் செய்து தயாரிக்கலாம்[1].
- பத்து ஆக்சிசன் அணுக்களைக் கொண்ட ஐதரசன் பாலியாக்சைடுகளை உருவாக்கவும் ஆராயப்பட்டு வருகிறது. கருத்தியலாக சாத்தியங்கள் இருப்பினும் ஐந்து ஆக்சிசன் அணுக்களுக்கு மேற்பட்ட பாலியாக்சைடுகள் நிலைப்புத்தன்மையற்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.[2].
அயனியாக்கம்
தொகுஅறியப்பட்டுள்ள அனைத்து ஐதரசன் பாலியாக்சைடுகளும் நீர்மநிலையில் தன்னயனியாக்கம் அடைகின்றன.
- H2On H+ + HOn–
- 2H2On H3On+ + HOn–
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Levanov, Alexander V.; Sakharov, Dmitri V.; Dashkova, Anna V.; Antipenko, Ewald E.; Lunin, Valeri V. (2011). "Synthesis of Hydrogen Polyoxides H2O4 and H2O3 and Their Characterization by Raman Spectroscopy". European Journal of Inorganic Chemistry: 5144–5150. doi:10.1002/ejic.201100767.
- ↑ Martins-Costa, Marilia; Anglada, Josep M.; Ruiz-Lopez, Manuel F.. "Structure, stability, and dynamics of hydrogen polyoxides". International Journal of Quantum Chemistry 111: 1543–1554. doi:10.1002/qua.22695.