ஐதரசைடு
ஐதரசைடுகள் (Hydrazides) என்பவை கரிம வேதியியலில் ஒரு வகையான கரிமச் சேர்மங்களாகும். பொதுவான ஒரு வேதி வினைக்குழுவை இவை பகிர்ந்துகொள்கின்றன. இப்பகிர்வில் ஒரு நைட்ரசன் நைட்ரசன் சகபிணைப்புடன் நான்கு பதிலிகளைக் கொண்டிருக்கும். இவற்றில் E(=O)-NR-NR2றைந்தபட்சம் ஒரு அசைல் குழு இருக்கவேண்டும் [1]. ஐதரசைடுகளுக்கான பொதுக் கட்டமைப்பு வாய்ப்பாடு E(=O)-NR-NR2 ஆகும். இங்குள்ள R'கள் பொதுவாக ஐதரசனாகத்தான் இருக்கும் [1]. ஆக்சிசனுடன் இணைக்கப்பட்டுள்ள அணுவைப் பொறுத்து ஐதரசைடுகளை மேலும் வகைப்படுத்த முடியும் [1] The related hydrazines do not carry an acyl group.[2]. கார்போ ஐதரசைடுகள் (R-C(=O)-NH-NH2), சல்போ ஐதரசைடுகள் (R-S(=O)2-NH-NH2) மற்றும் பாசுபோனிக் டை ஐதரசைடுகள் (R-P(=O)(-NH-NH2)2 என்பவை பிற வகைகளாகும். தொடர்புடைய ஐதரசீன் சேர்மங்கள் அசைல் குழுக்களைப் பெற்றிருப்பதில்லை. பாரா-தொலுயீன்சல்போனைல் ஐதரசைடு போன்ற சல்போனைல் ஐதரசைடுகள் இவ்வகைச் சேர்மங்களில் மிகவும் முக்கியமான சேர்மங்களாகும். கரிம வேதியியலில் இவை சாப்பிரோ வினை [3] மற்றும் எசுசென்மோசர்-தானாபி துண்டாக்கும் வினை போன்ற வினைகளில் இச்சேர்ம்ம் ஒரு பயனுள்ள வினையாக்கியாகப் பயன்படுகிறது [4][5]. டோசில் குளோரைடை ஐதரசீனுடன் சேர்த்து வினைபுரியச் செய்து இவ்வினையாக்கியை தயாரிக்க முடியும் [6].
மேற்கோள்கள் =
தொகு- ↑ 1.0 1.1 1.2 தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Hydrazides". Compendium of Chemical Terminology Internet edition.
- ↑ தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Hydrazines". Compendium of Chemical Terminology Internet edition.
- ↑ Robert H. Shapiro (1976). "Alkenes from Tosylhydrazones". Org. React. 23 (3): 405-507. doi:10.1002/0471264180.or023.03.
- ↑ Schreiber, J.; Felix, D.; Albert Eschenmoser; Winter, M.; Gautschi, F.; Schulte-Elte, K. H.; Sundt, E.; Günther Ohloff et al. (1967). "Die Synthese von Acetylen-carbonyl-Verbindungen durch Fragmentierung von α-β-Epoxy-ketonen mit p-Toluolsulfonylhydrazin. Vorläufige Mitteilung" (in German). Helv. Chim. Acta 50 (7): 2101–2108. doi:10.1002/hlca.19670500747.
- ↑ Masato Tanabe; Crowe, David F.; Dehn, Robert L. (1967). "A novel fragmentation reaction of α,β-epoxyketones the synthesis of acetylenic ketones". Tetrahedron Lett. 8 (40): 3943–3946. doi:10.1016/S0040-4039(01)89757-4.
- ↑ Friedman, Lester; Litle, Robert L.; Reichle, Walter R. (1960). "p-Toluenesulfonylhydrazide". Organic Syntheses 40: 93. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv5p1055.; Collective Volume, vol. 5, p. 1055