ஐயக்கடன்

(ஐயகடன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒவ்வொரு நிறுவனத்திலும் ஏற்கனவே போக்கெழுதப்பட்ட வராக்கடனுக்கும் அதிகமாக ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வராக்கடன் நேர்வது இயல்பு. இருப்புநிலை குறிப்பில் பற்பல கடனாளிகளின் உண்மையான தொகையைக் காட்ட வேண்டுமெனில், வாரா ஐயக்கடன் ஒதுக்கு சரிக்கட்டப்படவேண்டும். கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் பற்பல கடனாளிகள் மீது ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வரா மற்றும் ஐயக்கடன் ஒதுக்கிற்காக ஒதுக்கப்படும்.

இறுதிக் கணக்குகள் தயாரிக்கையில் சரிக்கட்டுதலில் கொடுக்கப்பட்டுள்ள போக்கெழுதப்பட வேண்டிய வராக்கடன் பற்பல கடனாளிகளிடமிருந்து கழிக்க வேண்டும். மீதமுள்ள மற்ற கடனாளிகள் (பற்பல கடனாளிகள் - வாராகடன் போக்கெழுதபட்டது) மீது வரா மற்றும் ஐயக்கடன் ஒதுக்கு கணக்கிடப்படும்.

  • இலாப நட்ட கணக்கின் பற்று பக்கத்திலும்,
  • பற்பல கடனாளிகளிடமிருந்து கழிக்கப்பட்டு இருப்புநிலை குறிப்பின் சொத்துக்கள் பக்கத்திலும் தோன்றும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயக்கடன்&oldid=2068360" இலிருந்து மீள்விக்கப்பட்டது