ஐயன் கொம்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஐயன் கொம்பு என்பது பேசும் குழந்தையிடம் தாய்மார் விளையாடும் விளையாட்டு. இது குழந்தையைப் பேசப் பழக்கும் விளையாட்டு.
பேசும் குழந்தையின் விரலை ஒவ்வொன்றாகப் பிடித்துக்கொண்டு ‘இது யார்க் கொம்பு, ஐயன் கொம்பு … என்று பாடி மகிழ்விக்கும் விளையாட்டு.
உரையாட்டுப் பாடல்
தொகுதாய் | குழந்தை |
---|---|
யார் கொம்பு | ஐயன் கொம்பு |
ஐயன் எங்கே | பூப் பறிக்க |
பூ எங்கே | தண்ணிக்குள்ளே |
தண்ணி எங்கே | ஆடுமாடு குடிச்சுபுடுத்து |
ஆடுமாடு எங்கே | குச்சியிலே (குச்சி = ஆடுமாடு அடைத்துவைக்கும் தொழுவம்) |
குச்சி எங்கே | தீயிலே எரிஞ்சுப் போச்சு |
சாம்பல் எங்கே | பல் விளக்கியாச்சு |
வெட்டவா, குத்தவா, வெந்நித் தண்ணி ஊத்தவா!
இவ்வாறு சொல்லிவிட்டுக் குழந்தையைத் தாய் செல்லமாகக் கிள்ளுவாள்.
பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை வெளியீடு, 1980