ஐயாத்துரை நடேசன்
ஐயாத்துரை நடேசன் இலங்கையின் முன்னோடி தமிழ் ஊடகவியலாளர் ஆவார். இவர் 2004 மே 31 அன்று மட்டக்களப்பு நகரில் வேலைக்கு செல்லும் வழியில் இலங்கை இராணுவத்தோடு சேர்ந்தியங்கும் கருணா குழுவைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் ஆயுதம் தாங்கியவர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்[1].
யாழ்ப்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த இவர் நெல்லை நடேசன் என்ற பெயரில் எழுதிவந்தார். [2] இறக்கும் போது இவர் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் துணைத்தலைவராக பணியாற்றினார். மேலும் இவர் சக்தி தொலைக்காட்சியின் மட்டக்களப்பு நிருபராகவும், வீரகேசரி நாளேட்டின் எழுத்தாளராகவும், ஐ.பி.சி. நிறுவனத்துக்கான இலங்கை நிருபராகவும் பணியாற்றி வந்தார்[3].