ஐயோடின் 129 என்பது ஓர் அணுஉலைக் கழிவுப் பொருளாகும். இது ஒரு சிக்கலற்ற ஐயோடின் 128 ஆக மாற்றப்படுகிறது. இதற்கு வேண்டப்படுவது எல்லாம் ஆய்வுக்கூட லேசர் கதிர்களே. ஐயோடின் 129 னின் அரை ஆயுள் 15.7 மில்லியன் ஆண்டுகளாகும். இதன் காரணமாக இதனைக் கையாளுவது மிகவும் அபாயகரமானதும் கடினமானதும் ஆகும். இப்போது ஐயோடின் 129 ஐ கண்ணாடியில் கலந்து பூமிக்கடியில் புதைக்கப்பட்டு வருகிறது. பேராசிரியர் கென் லெடிங்ஹாம் (Ken Ledingham ) மற்றும் அவரது துணைவர்கள் ஐயோடின் 129 ஐ லேசர் கதிர்களால் தாக்கி ஐயோடின் 128 ஆக மாற்றியுள்ளனர். ஐயோடின் 128 ன் அரை ஆயுள் 25 நிமிடங்களேயாகும். இதனை எளிதில் கையாள முடியும். ஒரு மணிநேரத்தில் களைந்துவிடலாம். இந்த மாற்றத்தினை பெரிய அளவில் நிகழ்த்த ஆய்வுகள் நடக்கின்றன. மேலும் லேசரைப் பயன்படுத்தி தனிம மாற்றம் செய்யமுடியும் என்று தெளிவாகி உள்ளது. இதனால் இனிமேல் சைக்ளோட்டிரான் துணை இல்லாமலே லேசர் துணையுடன் குறுகிய கால அரை ஆயுள் உடைய ஐசோடோப்புகளைப் பெறமுடியும். சுற்றுச்சுழலைப் பாதிக்காமல் அணுஉலைக் கழிவுகளை மாற்ற முடியும் என்பதனை இது காட்டுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயோடின்-129&oldid=4163883" இலிருந்து மீள்விக்கப்பட்டது