ஐராவ் பிணைப்பு வினை
டிரையால்கைல் பாசுபைட்டும் ஓர் அரைல் ஆலைடும் வினைபுரிந்து பாசுப்போனேட்டு உருவாகிறது
ஐராவ் பிணைப்பு வினை (Hirao coupling) என்பது பலேடியம்-வினையூக்கியைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் ஒரு குறுக்குப் பிணைப்பு வேதியியல் வினையாகும். ஐராவ் வினை, ஐராவ் குறுக்குப் பிணைப்பு வினை என்ற பெயர்களாலும் இவ்வினை அழைக்கப்படுகிறது. இவ்வினையில் டிரையால்கைல் பாசுபைட்டும் ஓர் அரைல் ஆலைடும் வினைபுரிந்து பாசுப்போனேட்டு உருவாகிறது[1][2][3].. டோசிகாசு ஐராவ் என்பவர் கண்டறிந்த காரணத்தினால் இவ்வினைக்கு ஐராவ் வினை என்ற பெயர் சூட்டப்பட்டது. மைக்கேலிசு – அர்புசோவ் வினையுடன் இவ்வினை தொடர்பு கொண்டதாக உள்ளது.
ஐராவ் பிணைப்பு வினை Hirao coupling | |
---|---|
பெயர் மூலம் | டோசிகாசு ஐராவ் |
வினையின் வகை | பிணைப்பு வினை |
மேற்கோள்கள்
தொகு- ↑ Hirao, Toshikazu; Masunaga, Toshio; Ohshiro, Yoshiki; Agawa, Toshio (1981). "A Novel Synthesis of Dialkyl Arenephosphonates". Synthesis (1): 56-57. doi:10.1055/s-1981-29335]]. https://archive.org/details/sim_synthesis_1981-01_1/page/56.
- ↑ Belabassi, Y.; Alzghari, S.; Montchamp, J.L. (15 January 2008). "Revisiting the Hirao Cross-coupling: Improved Synthesis of Aryl and Heteroaryl Phosphonates". J. Organomet. Chem. 693 (19): 3171-3178. doi:10.1016/j.jorganchem.2008.07.020. பப்மெட்:19156189.
- ↑ Kohler, Mark C.; Sokol, Joseph G.; Stockland Jr., Robert A. (28 January 2009). "Development of a room temperature Hirao reaction". Tetrahedron Letters 50 (4): 457-459. doi:10.1016/j.tetlet.2008.11.040.