ஐரோப்பிய நடுவண் வங்கி
ஐரோப்பிய நடுவண் வங்கி, ஐரோப்பாவின் பதினேழு உறுப்பு நாடுகளின் நிதிக் கொள்கைகளை நிர்வகிக்கும் பொது நிறுவனம் ஆகும். ஆகவே உலகின் முக்கியமான நடுவண் வங்கிகளில் இதுவும் ஒன்று. ஆம்ஸ்டர்டாமின் டிரியட்டியால் 1998ஆம் ஆண்டில், யேர்மனியின் பிரான்க்ஃபர்ட் நகரில் நிறுவப்பட்டது. இதன் தற்போதைய தலைவர், இத்தாலிய வங்கியின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய மரியோ திராகி ஆவார்.