ஐரோப்பிய மையவாதம்

ஐரோப்பிய மையவாதம் (Eurocentrism) என்பது உலகை ஐரோப்பிய தரப்பிலிருந்து நோக்குதலாகும். இப்பதம் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலனிமயமழிதல் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. 16-19 நூற்றாண்டுகளில் காலனிமயமாக்கம் ஏகாதிபத்தியம் ஆகியவற்றால் உலக அரங்கில் ஐரோப்பிய நாடுகள் மிகுந்த தாக்கம் கொண்டிருந்தன. பல்வேறு துறைகளிலும் இத்தாக்கத்தின் விளைவுகள் இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கலை மற்றும் அறிவியல் துறைகளில் உருவான பன்னாட்டு ஒழுங்கமைவுகளில் இத்தாக்கம் காணப்படுகிறது. உலகமெங்கும் பயன்படுத்தப்படும் பொது ஊழி நாட்காட்டி முறை, இலத்தீன் எழுத்து முறை, கிரீன்விச் இடைநிலை நேரம் போன்றவை இந்த ஐரோப்பிய மையவாதத்தின் வெளிப்பாடுகளே. ஐரோப்பிய மையவாத நோக்கில் ஐரோப்பா ஒன்றிணைந்தானவொரு நிலப்பரப்பாகவும், பண்பாட்டுக் கூறாகவும் கருதப்படுகிறது. ஐரோப்பியப் பண்பாடு உள்வாங்கிய கிழக்காசியக் கூறுகள் பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை. இந்நோக்கு உலகின் பிற பண்பாடுகளைக் காட்டிலும் மேற்கத்திய பழக்கவழக்கங்கள் மேலானவை என நிறுவ முனைகிறது.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. Eurocentrism and its discontents, American Historical Association
  2. Youngblood Henderson, James (Sákéj) (2011). "Ayukpachi: Empowering Aboriginal Thought". in Battiste, Marie. Reclaiming Indigenous Voice and Vision. UBC Press. பக். 259–61. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780774842471. 
  3. The German adjective europa-zentrisch ("Europe-centric") is attested in the 1920s, unrelated to the Marxist context of Amin's usage. Karl Haushofer, Geopolitik des pazifischen Ozeans (pp. 11–23, 110-113, passim). The context is Haushofer's comparison of the "Pacific space" in terms of global politics vs. "Europe-centric" politics.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோப்பிய_மையவாதம்&oldid=3889574" இலிருந்து மீள்விக்கப்பட்டது