ஐலாசு
ஐலாசு என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஓர் அங்கமான ஆந்திரிக்சு கழகத்தினால் வணிக அடிப்படையில் ஐரோப்பாவிலுள்ள ஏசுடிரியம் என்ற வளிவிண் மையத்துடன் கூட்டாகக் கட்டப்பட்ட ஒரு புவிநிலை தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்; இது ஏரியான் 5 வீ 198 என்ற ஏவூர்தியின் மூலம் பிரென்சு கயானா, கூரூவிலுள்ள கயானா விண்வெளி மையத்திலிருந்து 27 நவம்பர் 2010, இந்திய நேரப்படி 00.09 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. ஐலாசு (HYLAS) - Highly Adaptable Satellite - எளிதில் மாற்றமைவு செய்தக்க செயற்கைக்கோள் என்பதன் சுருக்கமே.