ஐலா கீட்டோ
ஐலா கீட்டோ (Aila Inkeri Keto, பிறப்பு: மார்ச் 14, 1943) ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மழைக்காடுகள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனரும், அதன் தலைவரும் ஆவார். இவ்வமைப்பு இப்போது ஆத்திரேலிய மழைக்காடுகள் பாதுகாப்பு அமைப்பு என அழைக்கப்படுகிறது. இவர் ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பிறந்தவர்.[1] உயிர் வேதியியல் படிப்பை முடித்து குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார்.[2] இவர் 1994, 2000, 2001 ஆம் ஆண்டுகளில் ஆத்திரேலியாவில் விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.[3] 2005 ஆம் ஆண்டு வால்வோ சுற்றுச்சூழலியல் விருது (Volvo Environment Prize) இவருக்கு வழங்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Keto, Aila Inkeri (1943 - )". Bright Sparcs Biographical entry. பார்க்கப்பட்ட நாள் 2008-02-29.
- ↑ Williams, Christine (2006). Green power: Environmentalists who have changed the face of Australia, Lothian Books, pp. 87-96.
- ↑ "It's an Honour". Australian Government. Archived from the original on 2011-05-26. பார்க்கப்பட்ட நாள் 2008-02-28.
- ↑ "Volvo awards protection of biodiversity". Volvo Environment Prize. Archived from the original on 2008-01-08. பார்க்கப்பட்ட நாள் 2008-02-28.