ஐவிநி விண்வெளிக் கழிவுகள் தொலைநோக்கி

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்வெளிக் கழிவுகள் தொலைநோக்கி (The ESA Space Debris Telescope) ஸ்பெயின் நாட்டின் டெனிரிஃப் தீவில் அமைந்துள்ளது. இது விண்வெளிக் கழிவுகளைக் கண்காணிப்பதற்காக நிறுவப்பட்டுள்ளது. இக்கழிவுகள் புவிநிலை வளையப் பகுதிகளிலும் புவிநிலை மாறும் வட்டப்பாதையிலும் (Geostationary transfer orbit) உள்ள விண்வெளிக் கழிவுகளைக் கண்காணிக்கிறது. மாதம் ஒரு முறை சந்திரனை மையமாக வைத்து ஆராய்கின்றன. இவ்வகை கண்காணிப்பிற்கு அதிக நேரம் ஆகும்.

புவிநிலை மாறும் வட்டப்பாதையில் உள்ள 15 சென்றிமீட்டருக்கும் அதிகமாக அளவுள்ள விண்வெளிக் கழிவுகளை இவை கண்காணிக்கின்றன.