ஐஸ்வர்யா ருதுபர்ண பிரதான்
ஐஸ்வர்யா ருதுபர்ண பிரதான்(முன்னதாக ரதிகாந்த பிரதான்) (பிறப்பு 12 நவம்பர் 1983) இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக திருநங்கை என அறிவித்த,இந்தியக் குடிமை அதிகாரியாக பணியாற்றி வரும் திருநங்கையாவார். ஒடிசா மாநிலத்தின் நிதி சேவை துறையில்(OFS) வணிக வரி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.[1] [2] [3] 2010 ஆம் ஆண்டில், ஆண் பாலினமாக, (ரதிகாந்த பிரதானாக) இந்திய குடிமை பணியில் சேர்ந்த ஐஸ்வர்யா, திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து, இந்திய உச்ச நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பையடுத்து, 2015 ஆம் ஆண்டில் தனது பாலின அடையாளத்தை சட்டப்பூர்வமாக மாற்றியுள்ளார்.[3]
குழந்தை பருவம் மற்றும் கல்வி
தொகுஐஸ்வர்யா, ஒடிசாவின் கந்தமாள்மாவட்டத்தில் உள்ள கனபகிரி என்ற கிராமத்தில் உள்ள கந்த பழங்குடியினரின் குடும்பத்தில் ரதிகாந்த பிரதானாகப் பிறந்தார். இவரது பெற்றோரின் மூன்று குழந்தைகளில் இவர் இரண்டாவது குழந்தையாவார், தனது தந்தை மற்றும் மூத்த சகோதரரால் இவரது பாலின தேர்வின் காரணமாக பாகுபாடு காட்டப்பட்டாலும், இவரது தாயும் தங்கையும் இவருக்கு ஆதரவாக இருந்துள்ளனர். [4] பள்ளியில் படிக்கும் போதே ஹிஜ்ரா, சக்கா, மாமு, குடோ... போன்ற இழிவான உள்ளூர் வார்த்தைகளைப் பயன்படுத்தியே உடன்படிப்போர் அவரை கேலி செய்துள்ளனர். மேலும் கல்லூரியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இந்திய அரசுப் பணியில் சேர்ந்தபோது அவரது திறமை இவரது பாலினத்தேர்வின் காரணமாக கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து தன்னை நிரூபித்து, தனது மாற்று அடையாளத்தை நிறுவியதால் தற்போது பெரும்பாலோனோர் இவரின் உண்மையான அடையாளத்தோடு மதித்து ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஐஸ்வர்யா இந்திய மக்கள் தொடர்பு கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர் ஆவார். [5]மேலும் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். [6]
6 செப்டம்பர் 2018 அன்று , இந்திய உச்ச நீதிமன்றம் ஒருமனதாக பிரிவு 377 ஐ அரசியலமைப்பிற்கு முரணானது, இது சுயவிருப்பம், நெருக்கம் மற்றும் அடையாளம் ஆகிய தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளித்தது, இதனையடுத்து ஐஸ்வர்யா தனது நீண்ட நாள் காதலனை மணமுடிக்க உள்ளதாக திட்டமிட்டுள்ளார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Odisha Government Officer Makes Public Her Transgender Identity". 20 December 2015. http://www.ndtv.com/india-news/odisha-government-officer-makes-public-her-transgender-identity-1257047. பார்த்த நாள்: 10 July 2016.
- ↑ "Paving the Way- India's First Transgender Civil Servant". Centre for Social Research gendermatters.in. 9 July 2016. Archived from the original on 12 July 2016. பார்க்கப்பட்ட நாள் 10 July 2016.
- ↑ 3.0 3.1 "Transgender Rutuparna, OFS, juggles time between work, community". 17 December 2015. http://www.orissapost.com/transgender-rutuparna-ofs-juggles-time-between-work-community/. பார்த்த நாள்: 10 July 2016.
- ↑ Dabas, Maninder (1 July 2016). "Meet Aishwarya Pradhan - India's First Transgender Civil Servant". Indiatimes. பார்க்கப்பட்ட நாள் 10 July 2016.
- ↑ "IIMC alumni meet held in Bhubaneswar". Times of India timesofindia.indiatimes.com. 23 March 2016. http://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/iimc-alumni-meet-held-in-bhubaneswar/articleshow/51519034.cms. பார்த்த நாள்: 10 July 2016.
- ↑ "Bravo, Madam: This Public Officer in Odisha Decided to Go Public with Her Transgender Identity". Better India. 24 December 2015. http://www.thebetterindia.com/40844/transgender-government-officer-odisha/. பார்த்த நாள்: 10 July 2016.
- ↑ "Odisha's First Transgender Civil Servant Plans Marriage After 377 Order". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2023-03-16.