ஐ நூன்
ஐ நூன் (High Noon) என்பது 1952ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மேற்கத்தியத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை இசுடான்லி கிரேமர் தயாரித்திருந்தார். கார்ல் போர்மென் திரைக்கதை அமைத்திருந்தார். பிரெட் சின்னேமன் இந்தத் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் கேரி கூப்பர் நடித்திருந்தார். பட்டணத்தின் பாதுகாப்பாளர் ஒருவர், ஒரு கொலைகாரர்களின் கூட்டத்தைத் தனியாகச் சந்திக்க வேண்டும் அல்லது தனது புது மனைவியுடன் பட்டணத்தை விட்டு வெளியேற வேண்டும் என்கிற சூழ்நிலையில் இருப்பதாக கதை அமைந்திருந்தது.
ஐ நூன் | |
---|---|
திரையரங்கு வெளியீட்டுச் சுவரொட்டி | |
இயக்கம் | பிரெட் சின்னேமன் |
தயாரிப்பு | இசுடான்லி கிரேமர் |
மூலக்கதை | "த டின் ஸ்டார்" படைத்தவர் யோவான் டபுள்யூ. கன்னிங்கம் |
திரைக்கதை | கார்ல் போர்மன் |
இசை | திமிட்ரி தியோம்கின் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | புலாய்ட் கிராஸ்பி |
படத்தொகுப்பு | எல்மோ வில்லியம்ஸ் ஹாரி டபுள்யூ. கெர்ஸ்டாட் |
கலையகம் | இசுடான்லி கிரேமர் புரடக்ஷன்ஸ் |
விநியோகம் | யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் |
வெளியீடு | சூலை 24, 1952 |
ஓட்டம் | 1:25 மணி நேரம் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$0.73 மில்லியன் (₹5.2 கோடி)[1] |
மொத்த வருவாய் | ஐஅ$12 மில்லியன் (₹85.8 கோடி)[2] |