ஒகந்தூர்
ஒகந்தூர் என்னும் ஊர் சங்ககாலத்தில் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் சேர வேந்தனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
ஆற்றுநீர் பாய வெட்டப்பட்ட வாய்க்காலின் மடைவாயிலில் நீரைத் தடுக்க உதவும் பலகை ‘ஓ’ எனப்படும். ஓ திறந்து நீர் பாய்ந்து விளைந்த நெல் ஓத்திர நெல். இந்த ஒகந்தூரில் இப்படி நெல் விளைந்தது.
மாயவண்ணன் என்பவன் திருமால். திருமாலை மனத்தில் போற்றி வாழ்ந்த ஒரு பெருமகனைச் செல்வக்கடுங்கோ வாழியாதன் அமைச்சனாக வைத்துக்கொண்டிருந்தான். அவனுக்கு இந்த ஒகந்தூரை இறையிலியாக வழங்கிச் சேரன் பேணிவந்தான். [1]
அடிக்குறிப்பு
தொகு- ↑ மாயவண்ணனை மனனுறப் பெற்றவற்கு ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்துப் புரோசு மயக்கி மல்லல் உள்ளமொடு மாசற விளங்கிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடினார் பத்துப்பாட்டு. பதிற்றுப்பத்து – பதிகம் 7