ஒசன் சாய்பு அப்துல் கபூர்
ஒசன் சாய்பு முஹம்மது அப்துல் கபூர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர், ஓவியர், பாடகர், மொழியியலாளர் போன்ற பன்முக ஆளுமை கொண்டவர்.
கல்வியும் பணியும்
தொகுயாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம், வண்ணை தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்றவர். இவரது முதல் நியமனம் காவற்படையிலாகும். சில காலங்களின் பின்னர் அதினின்றும் விலகி, ஆங்கில உதவியாசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். பின்னர் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் தமிழ்மொழி ஆசிரியராகப் பணியாற்றினார். யாழ்ப்பாண கல்வித்திணைக்களம், வடமத்திய மாகாணக் கல்வித்திணைக்களம், வடமத்திய மாகாணக் கல்வித்திணைக்களம் ஆகியவற்றிலும் பலவருடங்கள் பணியாற்றியுள்ளார்.
வவுனியா ஆண்டியாபுளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயம், யாழ்ப்பாணம் மஸ்றஉத்தீன் கலவன் பாடசாலை, யாழ்ப்பாணம் ஒஸ்மானிக்கல்லூரி, அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயம் ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ள இவர், மண்கும்பான் முஸ்லிம் பாடசாலை, யாழ்ப்பாணம் அல்ஹம்ரா முஸ்லிம் பாடசாலை, வவுனியா சூடுவெந்தபுலவு முஸ்லிம் வித்தியாலயம், முல்லைத்தீவு முஸ்லிம் வித்தியாலயம் முதலாம் பாடசாலைகளில் தலைமை ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.
கலைப்பணி
தொகுசிறந்த இலக்கியவாதியான இவர், பிரபல எழுத்தாளர், கவிதாயினி ஜன்சி கபூரின் தந்தையாவார். இவர் சிறந்த மேடை நாடக நடிகர். படிக்கும் காலத்தில் பல மேடை நாடகங்களில் அவர் திறமைகள் வெளிப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வண்ணை ஏ.எஸ். மணி அவர்களின் நட்டுவாங்கத்தில் பல மேடை நாடகங்களை நடித்துள்ளார். அவற்றுட் சில "உயிர்காத்த உத்தமன்" , " தோட்டக்கார மகள்" "கற்சிலை" ,போன்றன. இவற்றுள் கற்சிலை என்பது எழுத்தாளர் அப்துல் கபூர் அவர்களால் எழுதி இயக்கப்பட்ட நாடகமாகும். அன்றைய நாட்களில் ஏ. எஸ். மணி அவர்களின் மேடை நாடகங்கள் யாழ்ப்பாணத்தில் சிறப்புற்று, மக்கள் மனதை வென்றவையாக இருந்தன.
உசாத்துணை
தொகுயாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு - ரஹீம்