ஒசியன் ஆசன்

பின்லாந்தின் வேதியியலாளர் மற்றும் அரசியல்வாதி

அடோல்ஃப் ஒசியன் ஆசன் (Adolf Ossian Aschan) பின்லாந்து நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் மற்றும் ஓர் அரசியல்வாதியாவார். இந்நாட்டின் தலைநகரான எல்சிங்கி நகரத்தில் 1860 ஆம் ஆண்டு மே மாதம் 16 அன்று இவர் பிறந்தார். 1910 முதல் 1911 வரை இரண்டு ஆண்டுகள் பின்லாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பின்லாந்து நாட்டு சுவீடிய மக்கள் கட்சியை ஒசியன் ஆசன் பிரதிநிதித்துவப்படுத்தினார்[1]. 1908 ஆம் ஆண்டு முதல் 1927 ஆம் ஆண்டு வரை எல்சிங்கி பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகவும் ஒசியன் ஆசன் பணியாற்றினார். 1939 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 அன்று இவர் காலமானார்.

1922 ஆம் ஆண்டில் ஒசியன் ஆசன்

மேற்கோள்கள்தொகு

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசியன்_ஆசன்&oldid=2941945" இருந்து மீள்விக்கப்பட்டது