ஒடிசாவின் நாட்டுப்புற ஆடற்கலைகள்

ஒடிசாவானது கலைக்கும் பண்பாடுக்கும் பெயர் போன ஒரு பிரதேசமாகும். பல வகையான ஆடற்கலைகள் இம்மாநிலத்தின் வேறு பட்ட பகுதிகளில் உருவாகியுள்ளன.

குமுரா நடனம் (அல்லது கும்ரா நடனம்) ஆனது ஒடிசாவில் அதிகமாக விரும்பப்படும் மற்றும் முன்னணியில் இருக்கும் ஒரு நாட்டுப்புற நடனமாகும்.குமுரா நடனத்தில் அணியப்படும் ஆடைகள் நாட்டுப்புற ஆடைகளை ஒத்து இருப்பதால் இது நாட்டுபுற நடனம் என்று வகைப் படுத்தப் பட்டது ஆனால் தற்போதையா ஆராய்ச்சியாளர்கள் குமுரா நடனத்தின் முத்திரைகளும் ஆடற்கலையும் இந்தியாவில் உள்ள மற்ற பாரம்பரிய நடனத்தை ஒத்து இருப்பதாகக் வாதாடுகிறார்கள். குமுரா நடனம் உருவான காலகட்டம் சரியாகத் தெரியவில்லை. அநேக ஆராய்ச்சியாளர்கள் இது யுத்த நடனம் என்றும் இதை ராமாயணத்தில் ராவணன் இந்நடனத்தை ஆடினான் என்றும் கூறுகிறார்கள். குமுரா நடனத்தை பற்றி கோனார்க்கில் உள்ள சூரிய கோயிலில் சித்தரிக்கப்பட்டுள்ளது இந்த கலை இடைக்காலத்தில் இருந்தே ஆடப்பட்டு வருவதை உறுதிப் படுத்துகிறது. "சரளா மகாபாரதத்தில்" உள்ள "மத்திய பார்பா" குமுரா : டோலா மாடலா காடி ஜெ குமுரா பஜாய் குமுரா ஜெ குமு குமு ஹோய் காரஜாய் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. சண்டி புரணாங்கள் : பிரட்வாரா பிரதோலா டௌண்டி குமுரா கடமர்தாலா பஜான்டி மாரி கலாடுரா என்று குறிப்பிடுகிறது

குமுரா நடனம் ஆனது சுதேச அரசான காலகண்டி மாநிலத்தில் அரச தர்பாரில் ஆடப்படும் தர்பார் நடனம் ஆகவும் முந்தைய காலகண்டி மாநிலத்தில் போர் நடைபெறும் சமயங்களில் ஆடப்பட்டு வந்துள்ளது. இந்நடனத்தின் போது குமுரா. நிஷான், டோல், டால், மடல் முதலிய இசைகருவிகளில் இருந்து குறிப்பிட்ட வகையில் இசையானது கலந்து வரும் மேலும் இந்நடனத்தின் கலைஞர்களின் உணர்ச்சி பாவங்கள் மற்றும் அசைவுகள் இந்நடனத்தை ஒரு "கதாநாயக நடனம்" ஆக உருவகப் படுத்தும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இந்த நடனமானது ஒரு போர் நடன பாவத்திலிருந்து தற்போதைய பண்பாடு மற்றும் சமூக நடப்புக்கு ஏற்றவாறு படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளது. தற்போது இந்த நடனமானது சமூகத்தில் நடைபெறும் கேளிக்கைகள், பொழுதுபோக்குகள், அன்பு, ஈடுபாடு மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் எல்லா மத, இன மற்றும் வகுப்பு மக்கள் இடையே காணப்படுகிறது. காலகண்டியிலும் தென்மேற்கு ஒடிசாவின் பெரும் பகுதியிலும் பாரம்பரிய பழக்கத்தின் படி இந்த நடனமானது நுவகாய் மற்றும் தசரா கொண்டாட்டங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. குமுரா நடனமானது தென் மேற்கு ஒடிசாவிலும் ஆந்திர பிரதேச எல்லையோர சில பகுதிகளிலும் சத்திஸ்காரின் எல்லையோர பகுதிகளிலும் இந்த நடமானது ஒரு கிராமப்புற நடனம் என்னும் அளவிலே தன்னை மறைத்து உள்ளது. காலகண்டி பகுதியானது குமுரா நடனத்தை பிரபல படுத்துவதிலும் அதன் தனித்தன்மையை பாதுகாப்பதிலும் முன்னணி வகிக்கறது. காலகண்டியானது முக்கியமாக குமுரா நடனத்தின் நிலமாக அழைக்கப் படுகிறது. குமுரா நடனம் பல நேரங்களில் பல சர்வதேச நிகழ்வுகளில் தேசத்தின் பிரதிநிதியாக டெல்லி, மாஸ்கோ மற்றும் கொல்கத்தா போன்ற இடங்களிலும் இன்னும் பிற இந்திய நகரங்களிலும் பங்கேற்றுள்ளது. குமுரா நடனம் ஆனது பஒடிசாவிலே அதிகமாக ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட ஆடற்கலையும் ஆகும். [1] === ருக் மார் நாச்சா (&ச்சாஹீ ந்டனம்) === : இந்த நடனம் ஒடிசாவில் உள்ள மாயுர்பான்ஞ் மாவட்டத்திலும் மற்றும் பலேஸ்வார் மாவடத்தில் உள்ள நீல்கிரியிலும் உருவாகி ஆடப்பட்டு வருகிறது. இதற்கு தற்காப்பு கலை பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த நடனம் போலியான யுத்தகளத்தில் இரு குழுவினர் யுத்தம் செய்வது போல நடன அசைவுகளைக் கொண்டதாகக் காணப்படும். இரு குழுவினரும் தங்கள் கைகளில் ஆயுதங்கள் மற்றும் கேடயங்கள் ஏந்தி வேகமாக எழிலார்ந்த நேர்த்தியான நிலையில் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் தாக்குவதும் தற்காத்துக் கொள்வதும் போல இந்நடனம் அமையும். இதில் குறிப்பிடத் தக்கது இதோடு இணைந்த இசையாகும் இது சிக்கலான தாளம் மற்றும் வேகமான தட்டுதலுக்கு பெயர்பெற்றது. 'மகுரி' - ஒரு இரட்டை நாண் இசைக்கருவி, 'தும்ஸா' - ஒரு அரைக்கோள மேளம் மற்றும் 'சாட்சாடி' - ஒரு குள்ளமான கோள மேளம் ஆகியவை இந்த இசைக்கருவிகளுள் அடங்கும்

கோடி புவா

தொகு

இந்த கோடி புவா நடனத்தில் ஆண் நடனமாடுபவர்கள் பெண்கள் போல உடை அணிந்து ஆடுவார்கள். இவர்கள் பூரியிலுள்ள ராமச்சந்திரதேவா மூலம் கோயிலின் புற எல்லையில் நிறுவப்பட்ட அக்காதஸ் அல்லது உடற்பயிற்சிக் கூடத்தின் மாணவர்கள். இவர்கள் அக்கதாஸ் அமைப்பின் கிளையினர் ஆதலால் இந்த கோடி புவா நடனம் அக்கதா பிலாஸ் (அக்கதாவோடு தொடர்புடைய ஆண் மகன்கள்) என்றும் அறியப்படுகிறது. இதைப் போன்று ஆண்கள் பெண்கள் போல உடை அணிந்து கோடி புவா நடனம் ஆடுவதற்கு நியாயப் படுத்தப் படும் ஒரு காரணம், இறைவனை தொழுவதற்கு என்று பெண்கள் நடனம் ஆடுவதை விரும்பாத வைஷ்ணவ மதத்தை பின்பற்றும் சிலர் இவ்வாறு ஆண்கள் பெண்கள் போல உடை அணிந்து ஆடுவதை அறிமுகப் படுத்தினர். கோடி என்ற வார்த்தைக்கு 'ஒன்று' அல்லது 'ஒற்றை' என்றும் புவா என்பதற்கு 'ஆண் மகன்' என்றும் பொருள் படும். ஆனால் இந்த கோடி புவா நடனத்தில் நடனம் ஆடுபவர்கள் சோடியாகவே ஆடுவார்கள். இந்த நடனம் ஆடுவதற்கு ஆண் குழந்தைகள் ஆறு வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்தம் பதினான்கு வயது வரை பயிற்சி எடுத்துக் கொள்வார்கள், அதன் பிறகு அவர்கள் நடனம் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகவோ அல்லது மேடை நாடகக் குழுவில் சேர்ந்து விடுவார்கள். கோடி புவா தற்போது டால்ஸ் என்று அழைக்கப் படும் தொழில் முறை நடனக் குழுவின் ஒரு அங்கமாகச் செயல் படுகிறது. இதை தலைமை தாங்கி நடத்துபவர் குரு என்று அழைக்கப் படுகிறார்.

இந்த சிறுவர்களுக்கு இருவருட காலம் பயிற்சி அளிக்கப் படும் இந்த பயிற்சி காலத்தில் இவர்கள் இந்நடனத்தின் முழு அடிப்படை இயக்கங்களையும் பயிற்சித் திறனையும் தங்களுக்குள் ஈர்த்துக் கொண்ட பிறகு நடனத்தின் நளினமான இயக்கங்களையும் உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் முக பாவங்களையும் பெற்றுக் கொள்ளுவார்கள். ஒடிசாவின் மற்றொரு நடனம் ஆன மகாரி நடன கலைஞர்கள் போல் அல்லாது இவர்கள் இளம் வயதிலே நடனம் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுவதால் இவர்களின் உடல் எல்லா வித இயக்கங்களையும் அசைவுகளையும் அவற்றிற்கான பயிற்சிகளையும் எளிதாக ஏற்றுக் கொள்ளும்.

ஒரு கோடி புவா நடனம் ஆடப்படும் போது பக்வாஜ், ஜீனி,கைதாளம் மற்றும் ஆர்மோனியம் எனும் மூன்று இசைக்குழுவினர் நடன கலைஞர்களின் நடனத்தை ஆதரிப்பதுண்டு. அந்த நடன குழுவிற்கு உபரியான ஒரு பாடகர் இருந்தாலும் நடனம் ஆடும் சிறுவர்கள் ஆடும் போது பாடிக்கொண்டே ஆடுவர்.

  1. K.B. Nayak, "Ghumura" Folk Dance-A Glory of Kalahandi, in Tribal Dances of India, Edited by R.D. Tribhuwan, P.R. Tribhuwan, New Delhi, 1999, p. 79–89