ஒடியல்

காய்ந்த பனங்கிழங்கு

பனங்கிழங்கை நெடுக்கு வாட்டில் கிழித்து வெயிலில் காயவிடும்போது கிடைக்கும் உலர்ந்த கிழங்கு ஒடியல் எனப்படுகின்றது. இந்த ஒடியலை நீண்ட காலம் வைத்துப் பயன்படுத்த முடியும். பொதுவாக ஒடியலை உரலில் இடித்து மாவாக்கி அதிலிருந்து பலவகையான உணவுப் பொருட்களைச் செய்து உண்கிறார்கள். அவற்றில் பிரபலமானது ஒடியல் பிட்டு. ஒடியல் மாவுடன் காய்கறி, பலாக்கொட்டை சேர்த்து ஒடியற்கூழ் காய்ச்சுவார்கள். இவை யாழ்ப்பாணத்தில் பிரபலமான உணவு வகைகள்.[1][2][3]

ஒடியல்
கிட்டத்தட்ட ஒரே அமைப்பைக் கொண்ட புழுக்கொடியல்
பகுதிதமிழ்நாடு, இலங்கை
முக்கிய சேர்பொருட்கள்பனங்கிழங்கு

மேற்கோள்கள்

தொகு
  1. "A Taste of 'Sweet' Success". UNDP. பார்க்கப்பட்ட நாள் 9 September 2015.
  2. "The essence of Jaffna". Ceylontoday. பார்க்கப்பட்ட நாள் 9 September 2015.
  3. "Odiyal Flour Recipes". பார்க்கப்பட்ட நாள் 9 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடியல்&oldid=3889586" இலிருந்து மீள்விக்கப்பட்டது