ஒட்டு சமதளம்
கணிதத்தில், குறிப்பாக வகையிடல் வடிவகணிதத்தில், ஒரு ஒட்டு சமதளம் (Osculating Plane) அல்லது முத்தமிடும் தளம் என்பது ஒரு யூக்ளிடியன் வெளியில் அல்லது கேண்மை வெளியில் உள்ள ஒரு துணை பல்லுறு வெளியின் ஒரு புள்ளியில் இரண்டு வரிசை தொடர்பு உடைய ஒரு தளம் ஆகும். Osculate என்ற வார்த்தை Osculatus எனும் இலத்தீன் மொழி சொல்லிலிருந்து உறுவாக்கப்பட்டது, இது Osculari என்பதன் இறந்தகாலத்தை குறிக்கின்றது, இது "முத்தம்" என்று பொருள்படும். எனவே, ஒட்டு சமதளம் என்பது ஒரு துணை பல்லுறு வெளியினை முத்தமிடும் ஒரு தளம் ஆகும்.
யூக்ளிடியன் வளைவுகள் வடிவியலில், ஒட்டு சமதளத்தினை தொடுகோடு திசையன்கள் மற்றும் செங்குத்து திசையன்களின் நேரியல் நீட்டமாக ஃப்ரனட்-செரட்(Frenet-Serret) சூத்திரங்கள் வகையில் விவரிக்க முடியும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Do Carmo, Manfredo. Differential Geometry of Curves and Surfaces (2nd ed.). p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0486806990.