ஒண்ணாங்கிளி ரெண்டாங்கிளி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒண்ணாங்கிளி ரெண்டாங்கிளி தமிழ்நாட்டின் நாட்டுப்புற விளையாட்டுகளுள் அருமையானது. இது ஒரு சிறுமியர் விளையாட்டு. இதில் ஆட்ட நுழைவில் வென்றவர்-கிளி; தோற்றவர் பட்டவர். இதில் பட்டவர் என்பவர் வேடர் என பொருள் கொள்ளப்படும். நுழைவில் வென்ற கிளிகள் ஓடி ஒளிந்து கொள்ளும். பிறகு வேடர் அவர்களைக் கண்டு பிடிக்க வேண்டும். முதலில் மாட்டுவோர் ஒண்ணாங்கிளி. அடுத்தவர் ரெண்டாங்கிளி.இப்படியாக எல்லோரையும் கண்டு பிடிக்க வேண்டும். அனைவரையும் கண்டு பிடித்து விட்டால் ஆட்டத்தில் முதலில் கண்டுபிடிக்கப் பட்டவர் ஒண்ணாங்கிளி. மறுபடியும் ஆட்டம் முதலிலிருந்து தொடங்கும்.