ஒத்தக்கரிமூலவுண்ணி

ஒத்தக்கரிமூலவுண்ணி (Methylotroph) என்பது தனித்து அடையாளம் காணப்படுகின்ற பூமியில் அதிகப்படியாகப் பரவிவாழும் ஒரு நுண்ணுயிர் குழுவாகும். இவை ஒரு கரிம அணுவைக்கொண்ட மூலக்கூறு அல்லது சேர்மத்தைப் பயன்படுத்தி தனக்கான ஆற்றலாக மாற்றிக்கொள்கின்றன. உயிர்வளியுள்ள நிலையில் இவைகள் உயிர்வளிகளின் துணைக்கொண்டு ஒத்தக் கரிமச்சேர்மமான சாணவளி போன்றவற்றை எறும்புப்புளிமமாக (formic acid) மாற்றுகின்றன. மேலும் சில ஒருக்கரிமச் சேர்மமான எரிச்சாராயம், சாணவாயு, மெத்திலமைன்கள் ஆகியன.

மேலும் கரிம இணைப்பில்லாச் சேர்மமான இரட்டைமெத்தில்மைன் மற்றும் மூமெத்திலமைன் ஆகியனவையும் இவைகளால் பயன்படுத்தப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகின்றன. இவைகள் சாணவளியுண்ணிகளில் இருந்து மாறுபடுகின்றன. இவை ஒருக் கரிமசேர்மம் அனைத்தையும் சிதைக்கக் கூடியவை. இக்குழுவுக்குள் சாணவளியை சிதைக்கும் சாணவளியுண்ணிகளைச் சார்ந்த நுண்ணுழையாட்களும் அடங்கும். இவை ரிபுலோசு இருபாசுபட்டு (Ribulose bisphosphate) அனுவெறிகை வழியைப் பயன்படுத்தி கரிமச்சேர்மத்தைச் சிதைக்கும் வலிமையையும் பெற்றிருக்கின்றன.

குறிப்புகள்

தொகு
  • இதன் கலச்சவ்வில் அதிகப்படியான ச்டீராய்டுகள் எனப்படும் கொழுப்புச்சேர்மங்கள் காணப்படுகின்றன.
  • இவைகள் உயிரேற்றங்களில் பெரும் பங்காற்றுகின்றன. குறிப்பாக கழிவுநீர் சுத்திகரிப்பில் அதிகமாக பயன்படுத்தப் படுகின்றன.
  • இவைகள் உணவுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் சீர்மையில் பெறிதும் துணைப்புரிகின்றன.
  • இவைகளில் நுண்ணுழையாட்களைத் தவிர்த்து சில ஒருக்கல பூஞ்சைகளும் இக்குழுவிற்குள் வருகின்றன. குறிப்பாக பிச்சியா பாச்டோரிசு என்னும் ஒருக்கலப் பூஞ்சை ஒத்தக்கரிமூலவுண்ணிப் பூஞ்சையாகும்.
  • சாணவளியுண்ணிகள் குறிப்பிடுவனவாக மெத்தனோசார்சினா, மெத்திலோகாக்கசு ஆகியன அடங்கும்.
  • புவிவெப்ப மடைதல்இல் இவைகள் பெரும்பங்காற்றி வருகின்றன.
  • இவைகளில் சில உப்பிறப்புவளி நிலைப்புத் தன்மையும் பெற்றிருக்கின்றன.

காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒத்தக்கரிமூலவுண்ணி&oldid=1720415" இலிருந்து மீள்விக்கப்பட்டது