ஒத்தையா, ரெட்டையா

ஒத்தையா, ரெட்டையா என்பது சிறுவர்களால் விரும்பி விளையாடப்படும் விளையாட்டு. ஒத்தையா, ரெட்டையா எனும் பேச்சு வழக்குச் சொல் ஒற்றையா இரட்டையா எனும் எழுத்து வழக்குச் சொல்லை குறிக்கும். இவ்விளையாட்டு விரல்களை மடித்து நிமிர்த்துவதன் மூலம் விளையாடக்கூடிய ஒரு இலகுவான விளையாட்டாகும். இது சிறுவர்களின் கணித வல்லமையை கூட்ட வல்லது (கூட்டும் திறனை).

விளையாடும் முறை தொகு

இந்த விளையாட்டை இருவர் விளையாடுவர். ஒருவர் மற்றவரைப் பார்த்து ஒத்தையா, ரெட்டையா என வினாவுவார். மற்றவர் ஒத்தை அல்லது ரெட்டை என தனக்கு விரும்பியதை கூறுவார். விடை கூறுபவர் ஒற்றை என்றால் மற்றவர் ரெட்டையாகும். இதன் பிறகு விளையாட்டு ஆரம்பமாகும். ஒரு கையில் ஐந்து விரல்கள். ஐந்தையும் மடிக்காமல் எடுத்தால் ஐந்து என எண்ண வேண்டும். மடிக்கும் விரல்களை விட்டு எண்ண வேண்டும். ஒருவிரலை மட்டும் மடித்தால் நான்கு போல். இருவரும் ஒரே நேரத்தில் கையில் விரல்களை மடித்து எண்களை எடுப்பார். இருவர் எடுக்கும் எண்களையும் கூட்ட வேண்டும். கூட்டுத்தொகை ஒற்றை எண்ணாக வந்தால் ஒற்றை சொன்னவருக்கு வெற்றி. இரட்டை எண்ணாக வந்தால் ரெட்டை சொன்னவருக்கு வெற்றி. இவ்வாறு தொடர்ந்து விளையாடலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒத்தையா,_ரெட்டையா&oldid=1576160" இலிருந்து மீள்விக்கப்பட்டது