ஒன்றிணைப்பு
கணினி நிரலாக்கத்தில் ஒன்றிணைப்பு (Concatenation) என்பது இரண்டு வரியுரு இழைகளை ஒன்றிணைத்தலைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, விக்கிப் என்ற இழையும் பீடியா என்ற இழையும் ஒன்றிணைக்கப்பட்டால் விக்கிப்பீடியா என்று தோன்றும்.
குறியீடுகள்
தொகுசெய்நிரல்களில் ஒன்றிணைப்பை மேற்கொள்வதற்கு + அல்லது & பயன்படுத்தப்படுகின்றது.[1]
+ஐப் பயன்படுத்துவதற்கு எடுத்துக்காட்டாக, "விக்கிப்பீடியா, " + "கட்டற்ற கலைக்களஞ்சியம்";
என்பதைக் கூறமுடியும். இதன் வருவிளைவாக விக்கிப்பீடியா, கட்டற்ற கலைக்களஞ்சியம் என்பது அமையும்.
&ஐப் பயன்படுத்துவதற்கு எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்டு எக்செலில் = "தமிழ்"&"மொழி"
என்பதைக் கூறமுடியும். இதன் வருவிளைவாகத் தமிழ்மொழி என்பது அமையும்.
மைக்ரோசாப்டு எக்செலில் CONCATENATE எனும் சார்பைப் பயன்படுத்துவதன் மூலமும் ஒன்றிணைக்க முடியும்.[2]
பயன்பாடு
தொகுஒலிதம்
தொகுகதைக்கும் கடிகார மென்பொருட்களில் தேவையான சொற்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே பதிவு செய்யப்பட்டிருக்கும். அவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் பயனருக்குக் கருத்துப் பிழையற்ற முழுமையான வசனம் கிடைக்கும். எடுத்துக்காட்டாக,
- நேரம்
- ஒன்பது
- மணி
- இருபத்து
- இரண்டு
- நிமிடங்கள்
என்றவாறு அமையும்.
தொலைபேசி நிறுவனங்களில் பண மீதியைப் பயனர்களுக்குத் தெரியப்படுத்தவும் இம்முறையே பயன்படுத்தப்படுகின்றது.