ஒன்றிய பட்டியல்
இந்திய நாடாளுமன்றத்திற்கானத் தனிப்பட்ட சட்டவாக்க அதிகாரங்கள்,இந்திய அரசமைப்பின் ஏழாம் பட்டிகையில்[1] ஒன்றியப் பட்டியல் (Union List) அல்லது பட்டியல் ஒன்றில் (List-I) தரப்பட்டுள்ளன. இதில் நூறு உருப்படிகள் காணப்படுகின்றன. இதில் கடை உருப்படி 97 என்று எண்ணிடப்பட்டுள்ளது.
சட்டவாக்கப் பிரிவு மூன்று பட்டியலாக பிரிக்கப்பட்டுள்ளது:
- ஒன்றிய பட்டியல்
- மாநில பட்டியல்
- ஒருமுக பட்டியல்
ஐக்கிய அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் கூட்டாட்சி முறையல்லாது, கனடாவின் கூட்டாட்சி அரசு போன்று மிகு அதிகாரம் இந்திய ஒன்றிய அரசில் தக்கவைக்கப்பட்டுள்ளது.