ஒன்றொழிபொதுச்சொல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒன்றொழி பொதுச்சொல் என்பது தொடரில் முன் பின் வரும் சொற்களின் குறிப்பால் ஒரு பாலைத் தவிர்த்து மற்றொரு பாலைக் குறிப்பால் உணர்த்தும் சொல்லாகும். தமிழில் உயர்திணை, அஃறிணை ஆகிய இரு திணைகளிலும் பொதுவான சொற்கள் உண்டு. தொடரில் முன் பின் வரும் சொற்களின் குறிப்பால் அது குறிக்கும் பாலை நாம் அறியலாம் இவ்வாறு குறிப்பால் உணர்த்தும் சொல் ஒன்றொழி பொதுச்சொல் எனப்படும்.
உயர்திணை
தொகு“ | மக்கள் ஐவர் போர்க்களம் சென்றனர். | ” |
இத் தொடரில் மக்கள் என்னும் சொல் அதனை அடுத்து வரும் போர்க்களம் என்ற சொல்லினால் பெண்பாலைத் தவிர்த்து ஆண் பாலை உணர்த்தியது.
அஃறிணை
தொகு“ | இம்மாடு பால் கறக்கிறது. | ” |
இத் தொடரில் மாடு என்னும் சொல் அதனை அடுத்து வரும் பால் கறக்கிறது என்ற தொடரால் ஆண்பாலைத் தவிர்த்து பெண் பாலை உணர்த்தியது.