ஒப்பந்தப்பிழைகள்
ஒப்பந்தச்சட்டத்தில் ஒப்பந்தப் பிழை (Mistake) என்பது விடயப் பொருள் தொடர்பில் பிழையான எண்ணத்துடன் திறத்தவர்களுக்கிடையே ஏற்படும் ஒப்பந்தமாகும்.இத்தகைய ஒப்பந்தங்கள் சட்ட வலிமையினைக் கொண்டிருக்கா. சட்டமானது ஒப்பந்தப்பிழையினை 3 வகையாக பிரித்து வரையறுத்துள்ளது.அவையாவன:
ஒருபக்கப்பிழை
தொகுஒருபக்கப்பிழை என்பது ஒப்பந்தத்தில் ஈடுபடும் ஒரு திறத்தவர் மாத்திரம் விடயப்பொருள் தொடர்பாக பிழையான எண்ணத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபடலைக்குறிக்கும்.பிழைவிடாத திறத்தவர் அப் பிழையினை அறிந்திருந்தார் என்றும் இதன் மூலம் அவர் நன்மைகளைப் பெற்றுக்கொண்டார் எனவும் நீதிமன்றில் பாதிக்கப்பட்ட தரப்பினர் நிருபிக்க வேண்டும்.அவ்வாறு செய்ய தவறின் அது வலிதான ஒப்பந்தமாக கருதப்படும். இத்தகைய ஒப்பந்தத்தில் 4 வகையான கூறுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
- அடையாளம் பற்றிய பிழை
- உரையாடலில் ஏற்பட்ட பிழை
- ஆள் பற்றிய பிழை
- தகைமை பற்றிய பிழை
அடையாளம் பற்றிய பிழை
தொகுஒரு அடையாளத்தை தவறாக வேறோர் அடையாளம் என கருதி பிழையான எண்ணத்தில் ஏற்படுத்தப்படுகின்ற ஒப்பந்தமாகும்.
Error in Corpore
உரையாடலில் ஏற்பட்ட பிழை
தொகுஉரையாடலின் போது ஏற்படுகின்ற பிழையான எண்ணத்தில் ஏற்படுத்தப்படுகின்ற ஒப்பந்தமாகும்.
Error in Negotio
ஆள் பற்றிய பிழை
தொகுஆள் பற்றிய பிழையான எண்ணத்துல் ஏற்படுத்தப்படுகின்ற ஒப்பந்தமாகும்.இத்தகைய ஒப்பந்தங்கள் வறிதாகும்.
Error in persona
தகைமை பற்றிய பிழை
தொகுஒருவரின் தகைமை பற்றிய பிழையான எண்ணத்தில் ஏற்படுத்தப்படுகின்ற ஒப்பந்தமாகும்.
Error in Contitate
பரஸ்பரப்பிழை
தொகுஒப்பந்த திறத்தவர் இருவரும் ஒரே சமயத்தில் விடயபொருள் தொடர்பில் வேறு வேறான எண்ணத்தில் ஒப்பந்ததில் ஈடுபலைக் குறிக்கும்.
பொதுப்பிழை
தொகுஒப்பந்த திறத்தவர் இருவரும் விடயப்பொருள் தொடர்பில் ஒரே விதமான பிழையான பிழையான எண்ணத்துடன் ஒப்பந்ததில் ஈடுபலைக் குறிக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Eisenberg, Melvin A. (December 2003). "Mistake in Contract Law". California Law Review 91 (1573). http://scholarship.law.berkeley.edu/californialawreview/vol91/iss6/3/. பார்த்த நாள்: 18 January 2016.
- ↑ Kleinwort Benson Ltd v Lincoln City Council [1998] 3 WLR 1095
- ↑ Kubasek, Nancy; Browne, M. Neil; Heron, Daniel; Dhooge, Lucien; Barkacs, Linda (2016). Dynamic Business Law: The Essentials (3rd ed.). McGraw-Hill. p. 227. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781259415654.