ஒப்பீட்டு வலிமை
ஒப்பீட்டு வலிமை குறியீடு (RSI) என்பதை அறிய இங்கு செல்லவும்.
ஒப்பீட்டு வலிமை (relative strength) என்பது நுட்பப் பகுப்பாய்வு முறைகளில் ஒன்று. இந்த நுட்பப் பகுப்பாய்வு (Technical Analysis) மூலம் ஒரு பங்கினை அடுத்த பங்குடன் (பங்கு, துறை குறியீடு, சந்தை குறியீடு, பாண்டு) ஒப்பிட்டு எது வலிமையாக உள்ளது என்று அறியும் முறையாகும்
இதை அறிவதால் இதன் போக்கு மற்ற(அடுத்த) பங்கை விட எப்படி உள்ளது என அறியலாம். ஏதாவது ஒரு பங்கின் ஒப்பீட்டு வலிமையை மற்றொரு பங்குடன் ஒப்பிட்டு அறிய இவை இரண்டையும் வகுக்க வேண்டும். [1]
எடுத்துக்காட்டாக மைக்ரோசாப்ட் & ஆப்பிள் நிறுவனங்களை எடுத்துக்கொள்வோம். இப்போது மைக்ரோசாப்டின் ஒப்பீட்டு வலிமை ஆப்பிளை ஒப்பிட்டால் என்ன என்று அறிய மைக்ரோசாப்டை ஆப்பிளால் வகுக்க வேண்டும். மைக்ரோசாப்டின் விலை 160 என்றும் ஆப்பிளின் விலை 210 என்றும் கொண்டால் ஆப்பிளை ஒப்பிடும் போது மைக்ரோசாப்டின் ஒப்பீட்டு வலிமை 0.76 (160\210) . வரலாற்றுரீதியாக மைக்ரோசாப்டின் ஒப்பீட்டு வலிமை ஆப்பிளை ஒப்பிட்டால் .50 - .65 இக்குள் தான் இருக்கும் என்றால் .76 என்பது ஒப்பீட்டளவில் மைக்ரோசாப்ட் ஆப்பிளை விட வலிமையாக உள்ளது அல்லது ஆப்பிள் மைக்ரோசாப்ட்டை விட வலிமைகுன்றி உள்ளது அல்லது இரண்டும் கலந்து உள்ளது எனலாம்.
இவற்றின் ஒப்பீட்டு வலிமை வரலாற்று அளவில் இருக்க வேண்டுமென்றால் மைக்ரோசாப்ட்டின் விலை குறையவேண்டும் அல்லது ஆப்பிளின் விலை அதிகரிக்க வேண்டும்.