ஒப்புமை அதிகரிக்கும் காரணி
ஒப்புமை அதிகரிக்கும் காரணி (contrast improvement factor- C..I. F. ) என்பது கிரிட் பயன்படுத்துவதால் கதிர் படத்தில் எந்த அளவு ஒப்புமை (Contrast ) அதிகரிக்கிறது என்பதனை விளக்குகிறது.கிரிட் சிதறிய கதிர்களை சிறப்பாக அகற்றுகிறது எனத் தெரியும். நல்ல கிரிட் 80 % முதல் 90 %வரை சிதறிய கதிர்களை அகற்றுகின்றது. இதனை எளிதில் சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். சிதறிய கதிர்களை அகற்றுவதால் நல்ல ஒப்புமை ஏற்படுவதும் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகரித்த ஒப்பமை,ஒப்புமை அதிகரிப்புக் காரணிஎனக் குறிக்கப்படுகிறது.
ஒ.அ.கா.( K) = கிரிட்டுடன் கதிர்ப்படத்தில் ஒப்புமை / கிரிட் இல்லாமல் கதிர்படத்தில் ஒப்புமை,
என்று சுருக்கமாகக் குறிக்கலாம். நல்ல கிரிட்டிற்கு ஒ.அ. கா. கூடுதலாக இருத்தல் வேண்டும். ஒ.அ . கா பொதுவாக 1.5 முதல் 3.5 வரையிலும் உள்ளது.