ஒமேகா-டி
ஒமேகா-டி என்னும் கட்டற்ற மென்பொருள் ஜாவாவில் எழுதப்பட்டது. இது சோர்ஸ்போர்ஜில் தனி திட்டமாக தொடங்கப்பட்டது. இது மொழிபெயர்ப்புக்கு உதவும். இதைக் கொண்டு சுருங்குறித்தொடர் பயன்படுத்தவும், இணையான சொற்களை கண்டறியவும், பிழை திருத்தவும், இலக்கணத்திற்கு ஏற்ப மொழிபெயர்க்கவும் முடியும்.
ஒமேகா-டி மென்பொருள் லிப்ரே ஆபீஸ் மென்பொருளை ஆங்கிலத்தில் இருந்து பாஸ்க் மொழிக்கு மொழிபெயர்க்கிறது | |
வடிவமைப்பு | கெய்த் காட்ஃபிரே |
---|---|
உருவாக்குனர் | திதியர் பிரையல், அலெக்ஸ் புலோய்ச்சிக், சோல்டன் பார்ட்கோ, தியாகோ சபாகோ |
தொடக்க வெளியீடு | நவம்பர் 28, 2002 |
இயக்கு முறைமை | பல்வேறு இயங்கு தளங்களில் |
மென்பொருள் வகைமை | கணினி துணை மொழிபெயர்ப்பு |
உரிமம் | குனூ பொதுமக்கள் உரிமம் |
இணையத்தளம் | omegat.org |
இது லினக்சு, மேக் ஓஎஸ், மைக்ரோசாப்ட் விண்டோசு[1] ஆகிய இயங்குதளங்களில் இயங்குகிறது. இந்த மென்பொருள் 27 மொழிகளில் கிடைக்கிறது.[2]