ஒயிரடை

யுவான் அரசமரபின் ஒரு ககான்

ஒயிரடை என்பவர் வடக்கு யுவான் அரசமரபின் ஒரு ககான் ஆவார். இவர் 1415 - 1425இல் ஆட்சி செய்தார். அடய் கானால் தலைமை தாங்கப்பட்ட கிழக்கு மங்கோலியர்களால் தெல்பெக் கான் கொல்லப்பட்டதற்கு அல்லது அதே ஆண்டு மிங் அரசமரபுடனான ஒரு யுத்தத்தில் இறந்ததற்குப் பிறகு ஒயிரட்களின் உதவியுடன் ஒயிரடை அரியணைக்கு வந்தார். இவர் அரிக் போகேயின் நேரடி வழித்தோன்றல் ஆவார். இதன் காரணமாக ஒயிரட் ஆட்சியை முறைமை வாய்ந்ததாக்குவதற்காக இவர் அரியணைக்குக் கொண்டு வரப்பட்டார்.[1] ஒயிரடையின் ஆட்சியானது மேற்கு மங்கோலியப் பீடபூமியை மட்டுமே உள்ளடக்கி இருந்தது. எனினும், இவரின் இறப்பிற்கு அருகாமைக் காலத்தில் இது விரிவடைந்தது. இவரது ஆட்சியின் போது மிங் அரசமரபின் உதவியுடன் தோகானால் தலைமை தாங்கப்பட்ட மேற்கு மங்கோலியர்கள் 1422 மற்றும் 1423இல் முறையே அருக்தை சிங்சாங் மற்றும் அடய் கானுக்கு எதிராக இரண்டு முக்கியமான படைப்புகளைத் தொடங்கினர். அருக்தை சிங்சாங் கிழக்கு மங்கோலிய நிலப்பரப்பையும், அடய் கான் மங்கோலிய நிலப்பரப்பையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்த இரண்டு படையெடுப்பு முயற்சிகளிலும் இவர்கள் வெற்றி பெற்றனர்.

1425இல் ஒயிரடை கானின் இறப்பிற்குப் பிறகு ஒயிரட்களும், மேற்கு மங்கோலிய இனங்களுக்கும் மத்தியிலான சண்டைகள் கானின் அரியணையைப் பல ஆண்டுகளுக்கு வெற்றிடமாக வைத்திருந்தன.1433இல் ஒயிரட்கள் இறுதியாகத் தைசுன் கானுக்குப் (தொக்தோவா புகா) புதிய கானாக மகுடம் சூட்டினர். இது வரை இந்த வெற்றிடம் நீடித்தது. அதே நேரத்தில், கிழக்கில் ஒயிரட்களின் எதிரிகளான கிழக்கு மங்கோலியப் பழங்குடியினர் அடய் கானை 1425இல் பெரிய கானாக அறிவித்தனர். இது இறுதியாக ஐந்து ஆண்டுகளுக்கு எதிரெதிர் மங்கோலிய இனங்களால் ஆதரவளிக்கப்பட்ட இரண்டு கான்கள் ஒரே நேரத்தில் பதவியில் இருக்கும் நிலையை ஏற்படுத்தியது.

உசாத்துணை தொகு

  1. Societas Uralo-Altaica-Ural-Altaische Jahrbücher, Volumes 7–8, p. 191.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒயிரடை&oldid=3637934" இலிருந்து மீள்விக்கப்பட்டது