ஒய்-ஃபை

அருகலை

அருகலை தமிழ்:அருகலை (Wi-Fi) என்பது கம்பியில்லாத் தொடர்பு வசதி கொண்ட கருவியின் வணிகக்குறியீடு. இது குறிப்பாக உள்ளிடத்திற்கான கம்பியில்லா மின்காந்தத் தொடர்பு வலைக்கான IEEE 802.11 என்னும் சீர்தர அடிப்படையில் இயங்கும் கருவிகளுக்காக, ஒய்-ஃபை அலயன்சு ( Wi-Fi Alliance ) என்னும் நிறுவனம் வழங்கும் சான்றிதழும் அதற்கான வணிகக் குறியீடும் ஆகும். IEEE 802.11 என்னும் சீர்தரத்திற்கு இணங்க செயற்படும் எல்லாக் கருவிகளும் ஒய்-ஃபை சான்றிதழ் பெற்றதல்ல. அதாவது ஒய்-ஃபை இலச்சினை இல்லாவிடில் அவை IEEE 802.11 சீர்தரத்துடன் இயங்காதவை என்று பொருளல்ல.

அருகலை (Wi-Fi) இலச்சினை

மிகப்பெரும்பாலான கணினிகளும், கணினிவிளையாட்டுப் பெட்டிகளும், மடிக்கணினிகளும், அச்சியந்திரங்களும், பல்வேறு கணினித்துணைக் கருவிகளும் ஒய்-ஃபை திறங்கள் கொண்டவை.

ஒய்-ஃபை (Wi-Fi) என்னும் குறியீடு முதன்முதலாக ஆகத்து மாதம் 1999 ஆம் ஆண்டில் இருந்து வணிக நோக்கில் பயன்பாட்டில் வழங்கி வருகின்றது[1][2]

பயன்கள்

தொகு
இணைய அணுக்கம்
தொகு

ஒய்-ஃபை பொருத்தப்பட்ட கருவிகள் , கணினிகளைப் பயன்படுத்தி இணையத்தை பெற்றுக்கொள்ளலாம் . ஆனால் அந்த அணுக்கம் ஒய்-ஃபை எல்லைக்குள்ளே தான் சாத்தியமாகும் . ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கப் புள்ளிகளைத் துழவு எல்லையை வெம்புள்ளிகள் (hotspot) என்று சொல்லலாம் . இதன் பரப்பளவு ஒரு சிறிய அறையில் இருந்து சில சதுர மைல்கள் வரை இருக்கும் . இந்த துழவு எல்லையின் பரப்பு எத்தனை அணுக்கப் புள்ளிகளைக் கொண்டது என்பதைப் பொறுத்தும் , அவை எவ்வாறு மேற்பொருந்துகிறது என்பதைப் பொறுத்தும் பரந்து விரிந்து செயல்படும் .

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. U.S. Patent and Trademark Office.
  2. "What is the True Meaning of Wi-Fi?". Teleclick. Archived from the original on 2012-09-11. பார்க்கப்பட்ட நாள் 2007-08-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒய்-ஃபை&oldid=3962359" இலிருந்து மீள்விக்கப்பட்டது