ஒரவாங்கர நீலகாந்தன் நம்பூதிரி
ஒரவாங்கர நீலகாந்தன் நம்பூதிரி (Orawankara Neelakandhan Namboodiri) தென்னிந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த புகழ்பெற்ற அறிஞர் மற்றும் கவிஞர் ஆவார். 1857 முதல் 1917 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இவர் வாழ்ந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுநீலகாந்தன் நம்பூதிரி 1857 ஆம் ஆண்டு திருச்சூர் மாவட்டம், அன்னமனடாவில் உள்ள நம்பூதிரி ஒரவாங்கர இல்லத்தில் பிறந்தார். தனது தந்தையிடமிருந்து சமசுகிருதத்தில் ஆரம்ப பயிற்சியைப் பெற்றார். ஆனால், இவர் 17 வயதில் வித்வான் குங்கிராம வர்மாவின் கீழ் கொடுங்கல்லூரில் படிக்கச் சென்றார்.
நீலகாந்தனின் பல கவிதைகள் தொலைந்துவிட்டன. 1882 ஆம் ஆண்டுக்குப் பிறகு எழுதப்பட்ட கவிதைகள் மட்டுமே கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை பக்தியுடனும் அறிவார்ந்த தத்துவத்துடனும் தொடர்புள்ள கவிதைகளாகும்.
பாலோபதேசம், குசேல விருத்தம் (ஒட்டந்துள்ளல்), வரதோபாக்கியானம், பைமீ பரிணயம் (நாடகம்), தேவீமாகாத்மியம், அழகபுரி வர்ணம், அம்பிகா வினிசாதி ஆகியவை நீலகாந்தனுடைய முக்கியமான சில படைப்புகளில் அடங்கும்.