ஒரிக்கோட்டை
ஓய்கோட்டை என்பது பழமையான பெயர். இது காலபோக்கில் ஒரிக்கோட்டை என்றாயிற்று. ஒரிக்கோட்டை கிராமம் திருவாடானை வட்டம், இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2]
ஊரின் சிறப்புகள்
தொகுஇங்கு புனித மரியன்னை நடுநிலைப் பள்ளி உள்ளது. இதில் இப்பகுதியில் உள்ள எட்டு கிராமத்தில் உள்ள குழந்தைகள் பயிலுகின்றனர். இக்கிராமத்தில் இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் சம அளவில் உள்ளனர். அதோடு ஒற்றுமையும் அன்பும் நிறைந்து காணப்படும். இங்கு ஸ்ரீ நல்லாதுரை முனீஸ்வரர் ஸ்ரீ அங்கால பரமேஸ்வரி ஆலயம் சிறப்பு மிகுந்தது ஆகும். இக்கவிளில் ஆண்டுதோறும் மே மதம் இறுதியில் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் பால் குடம், காவடி எடுத்தல், அலகு குத்துதல் மற்றும் பூக்குழி இறங்குதல் போன்ற வழிபாடுகள் இங்கு வெகு விமரிசையாக நடைபெறும். இங்கு இந்து, கிருத்துவர் பகுபாடு இல்லாமல் இறைவனை வழிபடுவர்.
இங்கு ஜெபமாலை அன்னை ஆலயம் இந்த பகுதியின் சிறந்த ஆலயம் ஆகும். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இங்கும் இந்து கிருத்துவர் வேறுபாடு கிடையாது. இங்கு சிறப்பு என்னவென்றால் இத்திருவிழா சமயத்தில் எப்படியும் மழை பொழியும் என்பது மறுக்க முடியாத ஒன்று ஆகும். ஆண்டுதோறும் இத்திருவிழா நடைபெறும் போது மழை பொழியும். இது விவசாய காலம் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tiruvadanai Taluk - Revenue Village". Archived from the original on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் 2012-03-24.
- ↑ "Tiruvadanai Block - Panchayat Village". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2012-03-24.