ஒருபத்தி இருபத்தி (விளையாட்டு)
(ஒருபத்தி இருபத்தி - விளையாட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒருபத்தி இருபத்தி சிறுமியரின் ஒரு உரைப்பாட்டு விளையாட்டு.
சிறுமியர் தம் கைகளில் ஒன்றைத் தலையில் வைத்துக்கொண்டு வட்டமாக உட்காருவர். நடுவில் நிற்கும் மேலாள் ஒருத்தி ஒவ்வொருவர் தலையிலும் கையை வைத்துப் பாடிக்கொண்டே வருவாள். பாட்டு முடியும்போது யார் தலையில் கை வைக்கிறாளோ அவர் தன் தலையிலிருக்கும் கையை எடுத்துக்கொள்ளலாம்.
அவரைப் பூனைக்குட்டி என்று வைத்து மீண்டும் உரையாட்டுப்பாடல் தொடரும்.
தலையில் கை வைக்கும் பாடல்
ஒரு பெண்ணின் தலையில் கை வைத்து அவரோடு நிகழும் உரையாடல்
- உன் அப்பன் பேரு என்ன
- முருக்கந்தண்டு (சேர்ந்திசை விடை)
ஒவ்வொருவர் தலையாகத் தொட்டுகொண்டு பாடல்
- முருக்கந்தண்டு தின்றவரே,
- முள்ளிச்சாறு குடித்தவரே,
- தார் தார் வாழைக்காய்,
- தமுரு குத்தி வாழைக்காய்,
- பூப்பூ மண்டலம்,
- பூமாதேவி கை எடு.
கையை எடுத்துக்கொண்டு பூனை ஆவார்.
மீண்டும் உரையாடல்
- ஏ முதல் பூனைக்குட்டி,
- ஓய்
- மாரியம்மன் கோயிலுக்கு நெல்லுக் குத்த வாரியா
- என் பிள்ளை அழுவுது
- உன் அம்மாகிட்டே கொடுத்துவிட்டு வா
- போமாடங்குது
- பாட்டிகிட்டே
- போமாட்டேங்குது
- அப்பாகிட்டே
- போவுது
- கொடுத்துட்டு வா. எத்தனை எட்டிலே வாரே
- 10 எட்டிலே
அத்தனை எட்டிலே செல்லவேண்டும்.
15 எட்டிலே என்றால் அத்தனை எட்டிலே செல்லவேண்டும். (எட்டு = தப்படி)