ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோயில்
ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் என்பது நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இக்கோயிலில் திருவிழாவின் போது தூக்குதேர் தூக்கப்படுகிறது. [1]
மூலவராக பிடாரி செல்லாண்டியம்மனும், பரிவாரத் தெய்வங்களாக கருப்புசாமி, கன்னிமார், இசக்கி போன்றோரும் இக்கோயிலில் உள்ளனர். தேரோட்ட திருவிழா மாசிமகத்தினை ஒட்டி நடைபெறுகிறது. இத்திருவிழா 15 நாட்கள் நடைபெறுகிறது. மார்கழி மாதம் வேல் திருவிழா நடக்கிறது.