ஒரு கொடியும் அதன் கிளையும் (நூல்)
ஒரு கொடியும் அதன் கிளையும்[1] ஜெ. விமல் எழுதியப் புதின நூலாகும்.
நூலாசிரியர்
தொகுஜெ. விமல்[2], பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் மக்கள் தொடர்பியல் துறையில் பணிபுரியும் பேராசிரியர் ஆவார்.
பதிப்பு விவரங்கள்
தொகுஇந்நூலினை அ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலின் முதற் பதிப்பு சூன் 30, 2014 இல் வெளிவந்தது, பக்கங்கள்18+85.
நூலின் அறிமுகவுரைகள்
தொகுஇந்நூலின் வாழ்த்துரைகளை ஆயர் செ. சிங்கராயன், ஆயர் இலாரன்சு பயசு ஆகியோர் அளித்துள்ளனர். நூல் அணிந்துரையை இரபி பெர்னார்ட், பீட்டர் அல்போன்சு ஆகியோர் அளித்துள்ளனர். நூல் மதிப்பீட்டுரையை சோசப்பு டைட்டசு வழங்கியுள்ளார்.
‘‘இந்நூலைப்படிக்கும் பொழுதும் எனக்கும் தொடர்ந்து பென்-கர் படமும் அதில் வியாபித்திருக்கும் இயேசுவின் திருஉருவமும்நினைவில் வந்த வண்ணம் உள்ளன. பாசுகா விழாவையொட்டி விடுதலை செய்யப்பட்ட பாரபாசு பற்றிய நாவல் கூட உண்டு. அது படமாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த ‘‘மார்க்கசு’’ பற்றிய கற்பனைக் கதை இன்னும் விரிவாக்கப்பட்டால் நல்ல மாடமாக பென்-கர் அளவுக்கு பிரமாண்டமாகவே படமாக்கப்படவாய்ப்பு உள்ளது’’ என்று அணிந்துரையில் எழுதியுள்ளார் இரபி பெர்னார்ட்.
பீட்டர் அல்போன்சு தன் அணிந்துரையில் ‘‘விவிலியத்தை நேரடியாக எடுத்து படிப்பதற்கு ஆர்வமல்லாமல் இருக்கும் இளம் தலைமுறையினரை இந்நூல் நிச்சயம் கவர்ந்திழுக்கும். புதினத்தின் கற்பனையில் பொதியப்பட்ட விவிலியத்தின் நற்கருத்துக்கள் அவர்களைச் சென்றடையும்’’ என்று கூறியுள்ளார்.
நூல் உள்ளடக்கம்
தொகுஇந்நூலில் வாழ்த்துரை, நூல் மதிப்புரை, அணிந்துரைகள், அர்ப்பணம், தொடக்கக் கூறு, ஒரு கொடியும் அதன் கிளையும் அதன் கிளையும், பிற்சேர்கை ஆகிய பகுதிகள் உள்ளன.
நூலறிமுகம்
தொகுஏப்பிரல் 2009 திங்கள் சேலம் செவ்வாய்பேட்டை பாசுகா திருவிழிப்புப் திருப்பலிக்கான மறையுரை தயாரிக்க வேண்டி மாற்கு நற்செய்திப் பிரிவு 16ஐ வாசித்துக் கொண்டிருந்த தருணம் அது ‘‘உயிர்த்த இளைஞனின் கல்லறை மேல் ஒரு இளைஞன்’’ இத்திருவசனம் எனது வாசிப்புக்கு நிறுத்து நெம்பியாகி எனது சிந்தையின் வேர்பிடித்து முடுக்கிவிட்டது என புதினத்தின் தொடக்கக் கூற்றினை விவரிக்கின்றார் ஆசிரியர் ஜெ.விமல். விவிலிய அறிஞர்களின் விசாரிப்பில் இசேசுவைக் கைது செய்தபோது இருந்த இளைஞனை சான் மாற்கு (நற்செய்தியாளர்) என்று சொன்னாலும் அது ஒரு கருதுகோள் என்பதால்.. நான் வரலாற்று நாயகர் இயேசுவினுடைய வாழ்வினூடு ஓர் இளைஞனுக்கு இடமளித்து விவிலிய நிகழ்வுகளோடு கற்பனைக் கோர்த்து புதினம் படைத்திருக்கின்றேன் என புதினம் எந்த நிலையில் எழுதப்பட்டது என விவரித்துள்ளார் புதின ஆசிரியர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ ஜெ. விமல், 2014, ஒரு கொடியும் அதன் கிளையும், சேலம்: அ பதிப்பகம்.
- ↑ பெரியார் பல்கலைக்கழக வலைதளத்தில் ஜெ. விமலின் தகைமைத்தரவு[தொடர்பிழந்த இணைப்பு]