ஒரு சிறு இசை
(ஒரு சிறு இசை (நூல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒரு சிறு இசை வண்ணதாசனின் பன்னிரெண்டாவது சிறுகதைத்தொகுதி. இத்தொகுதியில் 15 சிறுகதைகள் உள்ளன. வண்ணதாசனுக்கே உரித்தான கவிதை அழகியல், தத்துவ உரையாடல்கள் கொண்ட இத்தொகுதியில் மனிதர்களின் அன்பும் உறவும் அதிகமாகப் பேசப்படுகிறது. முதுமையின் வாழ்வைச் சித்தரிக்கும் கதைகள் பலவும் இத்தொகுதியில் உள்ளன. தாமிரபரணி ஆற்றின் நீர்மையுடன், கதைகள் சிலவற்றில் இசை தென்படுகிறது. இச்சிறுகதைத் தொகுப்பிற்குச் சாகித்திய அகாதெமி (2016) விருது கிடைத்துள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "AKADEMI AWARDS (1955–2016)". Archived from the original on 2015-09-17. பார்க்கப்பட்ட நாள் 2017-04-24.