ஒரு தனி நிலை
தமிழ் இலக்கணத்தில் ஒரு தனி நிலை என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். வீரன் ஒருவன் தனக்கு நிகராக எவரும் இல்லை என்னும்படி ஒப்பற்ற வீரத்துடன் போரிடுவதைக் கூறுவது இத்துறை. "ஒரு ஒப்பற்ற நிலை" என்ற பொருள்பட, இத்துறைக்கு "ஒரு தனி நிலை" என்னும் பெயர் ஏற்பட்டது.
இதனை விளக்க, பெருகிவரும் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தும் கல்லணையைப் போலப் பெருமளவில் திரண்டு வரும் பகைவர் படையைத் தனி ஒருவனாக நின்று தடுத்த நிலையைக் கூறுவது [1] என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.
- பொருபடையுள் கற்சிறைபோன்று
- ஒருவன்தாங்கிய நிலையுரைத்தன்று
இதையே தொல்காப்பியமும் "வருவிசைப் புனலைக் கற்சிலைபோல ஒருவன் தாங்கிய பெருமை" என்கிறது.
எடுத்துக்காட்டு
தொகு- வீடுஉணர்ந் தோர்க்கும் வியப்பாமால் இந்நின்ற
- வாடல் முதியாள் வயிற்றிடம் - கூடார்
- பெரும்படை வெள்ளம் நெரிதரவும் பேரா
- இரும்புலி சேர்ந்த இடம்
- - புறப்பொருள் வெண்பாமாலை 50.
குறிப்பு
தொகு- ↑ இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பக். 87
உசாத்துணைகள்
தொகு- இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
- கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.