ஒரு முனை மின்சாரம்

ஒரு முனை மின்சாரம் (Single-phase electric power) என்பது மின் பொறியியலில் ஒரு மின் வழங்கல் முறையாகும். பெரும்பாலும் வீடுகளுக்கு ஒரு முனை மின்சார இணைப்பே பயன்படுத்தப்படுகிறது. இது ஒருமுனை மின்சாரம் என்றாலும், மின் கம்பத்தில் இருந்து இரு மின் கம்பிகள் வீட்டிற்கு வரும். இரு கம்பிகள் இருந்தாலும் ஒன்றில் நேர்மின்சாரம் ( பேஸ்), மற்றொன்றில் எதிர் மின்சாரமும் (நியூட்ரல்) வரும். வீட்டிலுள்ள மின்விளக்குகள், மின்விசிறிகள் போன்றவற்றுக்கு ஒருமுனை மின் ஆற்றல் இணைப்பே போதுமானது. தண்ணீர் இணைப்புகளுக்கு எக்கி (மோட்டார் பம்ப்) பயன்படுத்தினால்கூட ஒருமுனை மின்சக்தியே போதுமானது.

ஒரு முனை மின்சார மின்மாற்றி (கனடியன்).

ஒருமுனை மின் ஆற்றல் என்றால் விநாடிக்கு 60 முறை என்று இதில் மின்சாரமும், மின்னழுத்தமும் (வோல்டேஜுவும்) மாறுபடும். இந்தியாவைப் பொறுத்தவரை ஒருமுனை மின்சாரம் 230 வோல்ட் என்கிற அளவில் உள்ளது (அமெரிக்கா என்றால் 120 வோல்ட்தான்).[1]

மேற்கோள்கள்

தொகு
  1. ஜி. எஸ். எஸ். (10 சூன் 2017). "சிங்கிள் பேஸ், திரீ பேஸ் எதைப் பொருத்தலாம்?". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_முனை_மின்சாரம்&oldid=3931708" இலிருந்து மீள்விக்கப்பட்டது